குமரியில்: 2 நாட்களில் ரூ. 12. 25 கோடிக்கு மதுபான விற்பனை

0
23

குமரி மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளில், 77 கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை நடைபெறும். சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விடுமுறைக்கு முந்தைய இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 12.25 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதனால், கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here