​முதல் ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி

0
19

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா தேசிய மைதானத்​தில் நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்​களில் 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 247 ரன்​கள் எடுத்​தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்​கோல்ஸ் 68, டீன் ஃபாக்​ஸ்​கி​ராப்ட் 59, வில் யங் 30, நேதன் ஸ்மித் 21 ரன்​கள் எடுத்தனர். வங்​கதேச அணி தரப்​பில் தஸ்​கின் அகமது, ஷோரிபுல் இஸ்​லாம், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்​பற்​றினர்.

248 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த வங்​கதேச அணி 48.3 ஓவர்​களில் 221 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சைஃப் ஹசன் 57, தவுஹித் ஹிர்​தோய் 55, லிட்​டன் தாஸ் 45 ரன்​கள் சேர்த்​தனர்.நியூஸிலாந்து அணி சார்​பில் பிளேயர் டிக்​னர் 4, நேதன் ஸ்மித் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 26 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here