நாட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

0
21

பயணி​கள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு பெற்​றுள்​ளதாக ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

நாட்​டின் முதலா​வது பயணி​கள் ரயில் போக்​கு​வரத்து 1853-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி மகா​ராஷ்டிர மாநிலம் போரி பந்​தர்​ (​மும்​பை) மற்​றும் தானே இடையே தொடங்​கப்​பட்​டது. இந்த போக்​கு​வரத்து தொடங்​கப்​பட்டு நேற்​றுடன் 173-வது ஆண்டு நிறைவடைந்​துள்​ளது.

இதுதொடர்​பாக ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் தானே ரயில்வே பாலம், அம்​ரித் பாரத் ரயில் ஆகிய புகைப்​படங்​களை ஒருங்​கிணைத்து ஒரே புகைப்​பட​மாக நேற்று வெளி​யிட்டு ‘பயணம் தொடர்​கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய ரயில்​வே​யின் 173 ஆண்​டு​களைக் குறிக்​கும் வகை​யில், தானே ரயில்வே பாலம், ஒரு பழங்​கால ரயிலை​யும் சித்​தரிக்​கும் நம்​பக​மான காப்​பகப் புகைப்​படத்​தை​யும் நாங்​கள் பகிர்ந்​துள்​ளோம். இதன் மூலம், வரலாற்​றுப் பதிவு சரி​பார்க்​கப்​பட்ட ஆவணங்களுடன் ஒத்​துப்​போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here