வாக்குப்பதிவு, எண்ணிக்கையின்போது தடையற்ற மின் விநியோகம்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு

0
27

வாக்குப்பதிவு மற்​றும் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது தடையற்ற மின் விநி​யோகத்​துக்கு நடவடிக்கை எடுக்​கு​மாறு அலு​வலர்​களுக்கு மின்​வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்குப்பதிவு ஏப்​.23-ம் தேதி​யும், வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி​யும் நடை​பெற உள்​ளது. தேர்​தலை நியாய​மாக​வும், அமை​தி​யாக​வும் நடத்த தேர்​தல் ஆணை​யம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

பிரச்​சா​ரங்​கள் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரும் நிலை​யில், இரவு நேரங்​களில் அரசி​யல் கட்​சி​யினர் செயற்​கை​யாக மின்​தடையை ஏற்​படுத்​தி, வாக்​குக்கு பணம் கொடுக்க முயற்​சிப்​பார்​கள் என்​ப​தால், அதை கவன​மாக கண்​காணிக்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இரவு நேரங்​களில் எந்த இடத்​தி​லும் மின்​தடை ஏற்​படக் கூடாது என அனைத்து பிரிவு அலு​வலர்​களுக்​கும் மின்​வாரி​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. மேலும், வாக்​குப்​ப​திவு மற்​றும் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது தடையற்ற மின்​சா​ரம் வழங்​க​வும் மின்​வாரி​யம் சார்​பில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: தேர்​தல் அறிவிக்​கப்​படும் முன்பே அனைத்து பகு​தி​களி​லும் பராமரிப்​புப் பணி​கள் மேற்​ கொள்​ளப்​பட்​டன. கோடை​யில் மின்​சார பயன்​பாடு, மின் பளு அதி​கரிக்​கும் என்​ப​தால் பல இடங்​களில் மின் கம்​பிகள் மாற்​றப்​பட்​டுள்​ளன.

இதர முன்​னெச்சரிக்கை நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. வாக்​குச்​சாவடிகளை தயார் செய்​யும் பணி​கள் அடுத்த சில நாட்​களில் தொடங்​கும்.

இதையடுத்​து, அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் வாக்​குப்​ப​தி​வின்​போது மின்​தடை ஏற்​ப​டா​மல் இருக்க உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும். மாற்று வசதி​களும் தயார்​நிலை​யில் வைக்​கப்​படும்.

வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கும் ‘ஸ்ட்​ராங் ரூம்’ மற்​றும் வாக்கு எண்​ணும் மையங்​களில் மின்​தடை ஏற்​ப​டா​மல் இருக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மாற்று ஏற்​பாடு​களும் தயார் நிலை​யில் உள்​ளன.

இரவு நேரங்​களில் மின்​தடை ஏற்​படு​வதை தடுக்க, அலு​வலர்​கள் நள்​ளிரவு வரை பணி​யாற்ற அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here