சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி – ஹைலைட்ஸ் பார்வை

0
32

ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே – கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்​கத்தா அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்​சி​யாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்​தி​னார் சஞ்சு சாம்​சன். இந்த ஓவரில் 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. கேமரூன் கிரீன் வீசிய 2-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் ஒரு பவுண்​டரி விரட்ட 10 ரன்கள் சேர்க்​கப்​பட்​டன.

மறு​புறம் நிதான​மாக விளை​யாடிய கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 6 பந்​துகளில், 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் அனுகுல் ராய் சுழற்​பந்து வீச்​சில் ஸ்வீப் ஷாட் விளையாடிய போது டீப் விக்​கெட் திசை​யில் நின்ற ரோவ்மன் பவலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்​கெட்​டுக்கு ருது​ராஜ் கெய்க்​வாட், சஞ்சு சாம்​சன் ஜோடி 2.2 ஓவர்​களில் 25 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்ரே மட்​டையை சுழற்​றி​னார்.

கேமரூன் கிரீன் வீசிய 4-வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே தலா 2 பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 21 ரன்​கள் விளாசப்​பட்​டன. ஆயுஷ் மாத்​ரே​வின் அதிரடி​யால் சிஎஸ்கே அணி 4 ஓவர்​களில் 52 ரன்​கள் குவித்​தது. அனுகுல்ராய் வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் சிக்​ஸர் விளாசி​னார். வைபவ் அரோரா வீசிய 6-வது ஓவரில் முதல் 3 பந்துகளை​யும் ஆயுஷ் மாத்ரே பவுண்​டரிக்கு விரட்​டி​னார். ஆனால் இதே ஓவரின் கடைசி பந்தை அரோரா ஷாட் பாலாக வீச அதை ஆயுஷ் மாத்ரே டீப் மிட்விக்​கெட் திசையில் விளாசிய போது ரமன்​தீப் சிங்​கிடம் கேட்ச் ஆனது.

17 பந்​துகளை எதிர்​கொண்ட ஆயுஷ் மாத்ரே 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் விளாசி​னார். 2-வது விக்கெட்​டுக்கு ஆயுஷ் மாத்​ரே, சஞ்சு சாம்​சன் ஜோடி 22 பந்துகளில், 47 ரன்​கள் விளாசி​யது. பவர்​பிளே​வில் சிஎஸ்கே அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 72 ரன்​கள் குவித்தது. இதையடுத்து களமிறங்​கிய டெவால்ட் பிரேவிஸ், சுனில் நரேன் வீசிய 7-வது ஓவரின் கடைசி பந்தை லாங் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். வருண் சக்​ர​வர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்​சன் பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் பவுண்​டரி அடித்​தார். சுனில் நரேன் வீசிய 9-வது ஓவரில் 5 ரன்​களை மட்​டுமே விட்டுக்​கொடுத்​தார்.

கார்த்​திக் தியாகி வீசிய 10-வது ஓவரின் 5-வது பந்தை சஞ்சு சாம்​சன் பாயின்ட் திசை​யில் அற்​புத​மாக சிக்​ஸர் அடித்தார். இதனால் சிஎஸ்கே அணி 100 ரன்​களை கடந்தது. வருண் சக்​ர​வர்த்தி வீசிய 11-வது ஓவரில் வெறும் 3 ரன்​களை மட்​டுமே வழங்​கி​னார். தொடர்ந்து கார்த்திக் தியாகி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை லாங் ஆஃப் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட சஞ்சு சாம்​சன் அடுத்த பந்​தில் போல்​டா​னார். 32 பந்​துகளை சந்​தித்த சஞ்சு சாம்​சன் 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 48 ரன்​கள் சேர்த்தார். 3-வது விக்​கெட்​டுக்கு சஞ்சு சாம்​சன், டெவால்ட் பிரே​விஸ் ஜோடி 32 பந்​துகளில், 39 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய சர்ஃப​ராஸ் கான், கார்த்​திக் தியாகி வீசிய பந்​தில் டீப் பாயின்ட் திசை​யில் பவுண்​டரி அடித்​தார். 13-வது ஓவரை வீசிய சுனில் நரேன் வெறும் 3 ரன்​களை மட்​டுமே வழங்​கி​னார். வருண் சக்​ர​வர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சர்ஃப​ராஸ் கான் ஒரு சிக்​ஸரை​யும், டெவால்ட் பிரே​விஸ் 2 பவுண்​டரி​களை​யும் அடித்​தனர். அனுகுல் ராய் வீசிய அடுத்த ஓவரில் 6 ரன்​கள் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டன. வைபவ் அரோரா வீசிய 16-வது ஓவரில் டெவால்ட் பிரே​விஸ் தலா ஒரு சிக்​ஸரும் பவுண்​டரியும் விரட்ட, சர்ஃப​ராஸ் கான் பேக்​வேர்டு

ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸர் ஒன்றை பறக்கவிட்டார். இந்த ஓவரில் 20 ரன்​கள் விளாசப்​பட்​டன. சீராக ரன்​கள் சேர்த்த சஃர்​ப​ராஸ் கான் 18 பந்​துகளில், 2 சிக்ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 23 ரன்​கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்​தில் போல்​டா​னார். 4-வது விக்கெட்​டுக்கு சர்ஃப​ராஸ் கான், டெவால்ட் பிரே​விஸ் ஜோடி 29 பந்​துகளில் 51 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து ஷிவம் துபே களமிங்​கி​னார். சற்று அதிரடி காட்​டிய டெவால்ட் பிரே​விஸ் 29 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​கள் எடுத்த நிலை​யில் கார்த்​திக் தியாகி வீசிய வைடு யார்க்​கரை அடித்த போது ஷார்ட் தேர்டு திசை​யில் நின்ற வைபவ் அரோ​ரா​விடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷிவம் துபே 12 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 13 ரன்​களும், ஜேமி ஓவர்​டன் 6 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 7 ரன்​களும் சேர்க்க 20 ஓவர்​களின் முடி​வில் சிஎஸ்கே 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 192 ரன்​கள் எடுத்​தது.

கொல்​கத்தா அணி தரப்​பில் கார்த்​திக் தியாகி 2 விக்கெட்களை வீழ்த்​தி​னார். வைபவ் அரோ​ரா, அனுகுல் ராய், சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்றினர். சிஎஸ்கே அணி​யின் ரன் குவிப்பை நடு ஓவர்​களி​லும், இறு​திக்​கட்ட ஓவர்​களில் கொல்​கத்தா பந்​து​வீச்​சாளர்​கள் வெகு​வாக கட்​டுப்​படுத்​தினர். சுனில் நரேன் 4 ஓவர்​களை வீசி 21 ரன்​களை​யும், அனுகுல் ராய் 3 ஓவர்களை வீசி 21 ரன்​களை​யும், வருண் சக்​ர​வர்த்தி 3 ஓவர்களை வீசி 26 ரன்​களை​யும்​ மட்​டுமே வழங்​கினர்​. இவர்​கள்​ கூட்​டாக 10 ஓவர்​களில்​ 68 ரன்​களை விட்​டுக்​கொடுத்தனர்.

193 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கட்​டத்​தில் 10 ஓவர்​களில் 3 விக்கெட்கள் இழப்​புக்கு 81 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஃபின் ஆலன் ஒரு ரன்​னில் அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் ஆட்டமிழந்​தார். சுனில் நரேன் 17 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் கலீல் அகமது பந்​தில் சிலிப் திசை​யில் குர்​ஜப்​னீத் சிங்​கிடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார்.

அங்​ரிஷ் ரகு​வன்ஷி 19 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்டரிகளு​டன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் அகீல் ஹோசைன் பந்தை விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்டுக்கு அருகே டெவால்ட் பிரே​விஸிடம் கேட்ச் ஆனது. 11-வது ஓவரை வீசிய நூர் அகமது அடுத்​தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி கொல்​கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்​தார். சீராக ரன்​கள் சேர்த்த அஜிங்க்ய ரஹானே 22 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 28 ரன்​கள் எடுத்த நிலை​யில் நூர் அகமது வீசிய 5-வது பந்தை எக்​ஸ்​டிரா கவர் திசை​யில் தூக்கி அடித்த போது ருது​ராஜ் கெய்க்​வாட்​டிடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து களமிறங்​கிய கேமரூன் கிரீன், போல்டானார். இந்த இரு விக்​கெட்​களும் சிஎஸ்கே அணிக்கு திருப்​பு​முனையை கொடுத்​தன. இதன் பின்​னர் ரன்​கள் சேர்க்க தடு​மாறிய ரிங்கு சிங் 12 பந்​துகளில் 6 ரன்கள் எடுத்த நிலை​யில் நூர் அகமது பந்தை லாங் ஆன் திசை​யில் தூக்கி அடித்த போது ஷிவம் துபே​விடம் கேட்ச் ஆனது. அப்​போது ஸ்கோர் 12.5 ஓவர்​களில் 90 ஆக இருந்தது.

இதையடுத்து ரமன்​தீப் சிங், ரோவ்​மன் பவலுடன் இணைந்தார். ஜேமி ஓவர்​டன் வீசிய 14-வது ஓவரில் ரோவ்மன் பவல் சிக்​ஸர் விளாசி​னார். கடைசி 4 ஓவர்​களில் கொல்​கத்தா அணி​யின் வெற்​றிக்கு 73 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. கலீல் அகமது வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரிகளு​டன் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 18-வது ஓவரில் 7 ரன்​களை மட்​டுமே விட்டுக்​கொடுத்​தார்.

கடைசி 2 ஓவர்​களில் கொல்​கத்தா அணி​யின் வெற்​றிக்கு 55 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வானது. ஜேமி ஓவர்​டன் வீசிய 19-வது ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. கடைசி ஓவரில் 45 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. இது சாத்​தி​யம் இல்லை என்​ப​தால் சிஎஸ்கே அணி நிம்​மதி பெரு​மூச்சு விட்டது. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு அடுத்த ரமன்​தீப் சிங் 3-வது பந்​தில் சர்​ப​ராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

ரமன்​தீப் சிங் 23 பந்​துகளில், 35 ரன்​கள் சேர்த்​தார். 20 ஓவர்கள் முடி​வில் கொல்​கத்தா அணி 7 விக்​கெட்​கள் இழப்புக்கு 160 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. ரோவ்மன் பவல் 22 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்​களும், அனுகுல் ராய் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். சிஎஸ்கே அணி தரப்​பில் நூர் அகமது 3 விக்​கெட்​களை​யும், அன்​ஷுல் கம்​போஜ் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். அகீல் ஹோசைன், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்றினர்.

32 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 8-வது இடத்​துக்கு முன்னேறியது. அதேவேளை​யில் கொல்​கத்தா அணிக்கு இது 4-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி நடப்பு சீசனில் இது​வரை ஒரு வெற்​றிகூட பெற​வில்​லை. 5 ஆட்டங்களில் விளை​யாடி உள்ள கொல்​கத்தா அணி ஒரு புள்​ளி​யுடன்​ கடைசி இடத்​தில்​ உள்​ளது.

தப்​பித்த பிரே​விஸ்

சுனில் நரேன் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தை டெவால்ட் பிரே​விஸ் தூக்கி அடித்த போது உயர​மாக லாங் ஆஃப் திசையை நோக்கி சென்​றது. அப்​போது பந்தை கேட்ச் செய்ய கவர் திசை​யில் இருந்து அஜிங்க்ய ரஹானே விரைந்து சென்​றார். அவருடன் மேலும் 3 வீரர்​கள் வேகமாக ஓடினர். ஆனால் பந்து அவர்​களுக்கு மத்​தி​யில் விழுந்​தது. இதனால் டெவால்ட் பிரே​விஸ் தப்​பித்​தார். அப்போது டெவால்ட் பிரே​விஸ் 9 ரன்​களில் இருந்​தார்.

33 ஆயிரம் ரசிகர்​கள்

ஐபிஎல் தொடரில் நேற்று சேப்​பாக்​கம் மைதானத்தி சிஎஸ்கே – கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. இந்த போட்​டிய காண சுமார் 33, 241 ரசிகர்​கள் மைதானத்தில் குவிந்​திருந்​தனர்.

சி.டி. கோபி​நாத்​துக்கு இரங்கல்

ஐபிஎல் தொடரில் நேற்று சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதி​ரான போட்டியின் போது, மறைந்த இந்​திய முன்​னாள் வீரர் சி.டி. கோபி​நாத்​துக்கு இரங்கல் செலுத்​தும் வித​மாக சிஎஸ்கே வீரர்​கள் கருப்​புப் பட்​டையை அணிந்து விளையாடினார்கள்.

‘தப்​பித்த நரேன் சிக்​கி​னார்’

கொல்​கத்தா அணி​யின் தொடக்க வீர​ரான சுனில் நரேன் 18 ரன்​களில் இருந்த போது மிட் ஆஃப் திசை​யில் எளி​தாக கொடுத்த கேட்ச்சை சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்வாட் தவற​விட்​டார். அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்​தில் இது நிகழ்ந்​தது. எனினும் இந்த வாய்ப்பை சுனில் நரேன் சரி​யாக பயன்​படுத்​திக் கொள்ளவில்​லை. கலீல் அகமது வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

அரை சதம் இல்​லாமல்..

ஐபிஎல் தொடரில் கொல்​கத்தா அணிக்கு எதி​ராக நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 192 ரன்​கள் குவித்​தது. ஐபிஎல் வரலாற்​றில் ஒரு வீரர் கூட 50 ரன்​களைக் கடக்​காமல், சிஎஸ்கே அணி எடுத்த இரண்​டாவது அதி​கபட்ச ஸ்கோர் இது​வாகும். இதற்கு முன்​ன​தாக 2012-ல் வி​சாகப்​பட்​டினத்​தில் டெக்கான் சார்​ஜர்​ஸ் அணிக்கு எதி​ராக சிஎஸ்கே அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்​கு 193 ரன்​கள்​ எடுத்​திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here