பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி ரோடு அப்டா வழியாக 4 வழிச்சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் பார்வதிபுரம், பெருவிளை கோணம், இளங்கடை வழியாக செல்ல வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.














