பின் தங்கும் மும்பை இந்தியன்ஸ் – தேவை இளம் படை!

0
35

வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி – மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலவீனம் சூறையாடப்பட்டது என்றே கூற வேண்டும். கடைசியில் ஷெர்ஃபானே ரூதர்போர்ட் 9 சிக்சர்க்ளுடன் 31 பந்துகளில் 71 ரன்கள் விளாசவில்லை எனில் மும்பை இந்தியன்ஸ் பெரிய தோல்வியை சந்தித்திருக்கும்.

16-வது ஓவரில் நமன் தீர் 1 ரன்னில் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 154 ரன்களாக இருந்தது. ஓவருக்கு 10 ரன்கள் பக்கம் ரன் ரேட் இருந்தும் தேவைப்படும் விகிதம் 4 ஓவர்களில் 86 ரன்கள் என்ற அசாத்திய நிலையை எட்டியது. தொடக்கத்திலிருந்தே அவர்கள் இந்த இலக்கை எட்டுவதற்கான நிலையில் இல்லை என்றே கூற வேண்டும்.

சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் பவர் ப்ளே ரணகளத்தைப் பார்த்தோம். அதாவது சன் ரைசர்ஸ் 6 ஓவர்களில் 105 ரன்களை விளாச திரும்பவும் பஞ்சாப் கிங்ஸ் 6 ஓவர்களில் 93/0 என்று பின் தொடர்ந்தது, இதனை ஒப்பிடும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பவர் ப்ளே ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

கிரிக் இன்போ புள்ளி விவரங்களின் படி 2025 ஐபிஎல் தொடரில் சராசரி பவர் ப்ளே ஸ்கோர் ஒட்டுமொத்த அணிகளையும் சேர்த்து 9.59 என்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் இது 10.47 ஆக உள்ளது. பவர் ப்ளேயில் 70 ரன்களுக்கும் கூடுதலாக அடிப்பதே இப்போதைய ட்ரெண்ட். இந்த 37 முறை 70+ ரன்களுக்கு 5 அணிகள் 31 முறை இதைச் செய்துள்ளது என்பதே, மற்ற அணிகள் பலதரப்பட்ட காரணங்களினால் பின் தங்கியுள்ளன.

ஆனால் நிறைய முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் இந்த லெவலுக்கு முன்னேற முடியாத காரணம் இன்னமும் டாடீஸ் ஆர்மி போல் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷர்துல் தாக்கூர் என்று அணியை வைத்துள்ளனர்.

டிம் டேவிட், இஷான் கிஷன் போன்ற முறையே பினிஷிங் அதிரடி மற்றும் பவர் ப்ளே அதிரடி வீரர்களை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கைவிட்டதுதான் காரணம். போலார்டு போன பிறகே டிம் டேவிட் அந்த ரோலுக்கு மிகப் பொருத்தமானவராக இருக்கிறார். ஆனால் அவரை வேண்டாம் என்று கழற்றி விட்டது மும்பை இந்தியன்ஸ்.

அனுபவம் என்பது தவறான உத்தியாகி வருகிறது, இளம் வீரர் காட்டடி தர்பார்தான் ஐபிஎல் தாரக மந்திரமாகி விட்டது. மாறி வரும் சூழலுக்கேற்ப மும்பை இந்தியன்ஸ் மாறவில்லை எனில் பின் தங்கிப்போய் விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here