கொல்லங்கோடு பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நிற்காமல் சென்ற கார் ஒன்றை துரத்திப் பிடித்தனர். காரை சோதனை செய்தபோது, அதன் டிக்கியில் 35 வயது பெண் ஒருவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதிகாரிகளால் கொல்லங்கோடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையின் விசாரணையில், இது கள்ளக்காதல் ஜோடி என்றும், ஆட்கள் பார்த்து விடுவார்கள் என்ற பயத்தில் பெண் காரின் டிக்கியில் ஏறி வந்ததும் தெரியவந்தது.














