குமரி: காங்கிரஸ் பாதயாத்திரை ;விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு

0
24

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் இரயுமன்துறையில் நேற்று காங்கிரஸ் நடைபயணம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாதயாத்திரையின் போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here