மதரசாவில் பகவத் கீதை படிக்கச் சொன்ன ஐபிஎஸ்

0
45

மத்​திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்​டம் டோரஹா கிராமத்​தில் மதரசா பள்ளி உள்​ளது. குடியரசு தினத்​தன்று மாநில காவல் துறை ஏடிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங் அந்த மதரசா மாணவர்​களிடையே காணொலி மூலம் உரை​யாற்​றி​னார்.

இதுகுறித்து பிடிஐ செய்​தி​யாளரிடம் சிங் கூறும்​போது, ”டோரஹா கிராமத்​தில் உள்ள மதர​சா​வின் மவுலானா எனது பழைய நண்​பர். குடியரசு தினத்​தன்று மாணவர்​களிடையே உரை​யாற்​று​மாறு அவர் என்​னைக் கேட்​டுக்​கொண்​டார்.

மாணவர்​கள் பெற்று வரும் கல்விக்​காக அவர்​களுக்கு நான் வாழ்த்து கூறினேன். பகவத் கீதை பல நூற்​றாண்​டு​களாக மனிதகுலத்​துக்கு அறிவொளி புகட்டி வரு​வ​தால், புனித குரானுடன் அதை​யும் படிக்​கு​மாறு மாணவர்​களிடம்​ கூறினேன்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here