குஜராத் மாநிலம் சூரத் அருகே 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

0
23

மகா​ராஷ்டி​ரா​வின் துலே நகரில் இருந்து மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று குஜராத் மாநிலம் சூரத் நோக்கி வந்து கொண்​டிருந்​தது.

இந்​தப் பேருந்து சூரத் மாவட்​டத்​தின் பர்​டோலி தாலுகா உவா-​ மானேக்​பூர் கிராமத்​துக்கு அரு​கில் கட்​டுப்​பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்​டிருந்த டிராக்​டர் மீது மோதி​யது. மோதிய வேகத்​தில் அந்​தப் பேருந்து சாலை​யின் நடுவே இருந்த தடுப்​பைத் தாண்டி எதிர்​திசை​யில் வந்து கொண்​டிருந்த மற்றொரு மகா​ராஷ்டிர அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கர​மாக மோதி​யது. இதில் ஒரு பேருந்​தில் சுமார் 25 பயணிகளும், மற்​றொரு பேருந்​தில் சுமார் 35 பயணி​களும் இருந்தனர்.

இந்​தக் கோர விபத்​தில் ஒரு பேருந்து பலமுறை உருண்டு சாலையோர பள்​ளத்​தில் விழுந்​தது. பின்​னர் தீப்​பற்றி எரிந்​தது. இந்த விபத்​தில் 7 பயணி​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்​தனர். இவர்​கள் பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இவர்​களில் சிலர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் இருப்​ப​தால் உயி​ரிழப்பு அதி​கரிக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது. இந்த விபத்து காரண​மாக நெடுஞ்​சாலை​யில் நீண்ட தொலை​வுக்கு போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. விபத்து குறித்து போலீ​ஸார்​ விசாரிக்கின்றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here