கோட்டாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

0
321

நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று கம்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், இடலாக்குடி பகுதியை சேர்ந்த சர்மா (வயது 20), பறக்கை விலக்கை சேர்ந்த சதீஷ் (32), சுசீந்திரத்தை சேர்ந்த ஹரிஹரன் (24), வழுக்கம்பாறையை சேர்ந்த ஜெபின் (22) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சர்மா உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here