Home 2024
Yearly Archives: 2024
IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு: அஸ்வின், குல்தீப் அபார பந்துவீச்சு
இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் அந்த அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-ம் நாள்...
NZ vs AUS டி20 தொடர் | 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா
நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரு சர்வதேச டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில்...
லைவ் ஆக்ஷன் படமாக உருவாகிறது ‘நரூட்டோ’
உலகப் புகழ் பெற்ற ‘நரூட்டோ’ அனிமேஷன் தொடரை முழுநீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை லயன்ஸ்கேட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் கதைகளில் புகழ்பெற்றது ‘நரூட்டோ’. மசாஷி கிஷிமோட்டோ என்பவர் உருவாக்கிய இந்த காமிக்ஸ் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 கோடிக்கும் அதிகமாக பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இது தொலைகாட்சி தொடராகவும் 220 எபிசோடுகளாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவிலும் இந்த கதாபாத்திரத்துக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.இந்த நிலையில், புகழ்பெற்ற இத்தொடரை திரைப்படமாக...
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்ட இன்று (பிப்.26) முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்ட உள்ளார். இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் நேற்று குப்பத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "ரெட்டி குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்.26-ம் தேதி...
பரந்தூர்- முதல்கட்டமாக 218 பேரிடம் 93 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நோட்டீஸ்
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவையும் உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து...
பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு
ஜார்கண்ட் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வரானார்.
அவரது தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த போது,ஓட்டெப்பில் பங்கேற்க பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த் சோரன் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்.
தற்போது ஜார்கண்ட்...
ஹரியாணா வன்முறை: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
ரியாணாவின் நூ நகரில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) ஊர்வலத்தில் ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்த மோதலில் இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், “காங்கிரஸ் எம்எல்ஏமம்மன் கான் மீது போடப்பட்டஎஃப்ஐஆரில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான யுஏபிஏ-வின்கீழ் போலீஸார் குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளனர். கான் வன்முறையை தூண்டியதாகவும், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் இடுகைகளை பகிர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதை தவிர வேறு...
கர்நாடகாவில் கோயில்களுக்கு 10% வரி: பாஜக எதிர்ப்பும், சித்தராமையா விளக்கமும்
கர்நாடகாவில் கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடந்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று, ‘கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா’வை நிறைவேற்றியது. இந்த சட்டத்திருத்தத்துக்குப் பிறகு, கோயிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோயில்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்கள் 5 சதவீதம் வரி செலுத்த...
“ஒய்.எஸ்.ஆர் வாரிசுதானா?” – ஜெகனை விளாசிய ஷர்மிளா
ஆந்திர மாநிலம் முழுவதும் காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதை முன்னிட்டு அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா முன்தினம் இரவே விஜயவாடா சென்று, ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.நேற்று காலை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உண்டவல்லியில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அமராவதி பாலம் மீது செல்ல முயன்ற போராட்டக்காரர்களை...
சந்தேஷ்காலி நில அபகரிப்பு விவகாரம்: ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.
நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ள அமலாகத் துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் முதல் தகவல் அறிக்கைக்கு இணையான புதிய அமலாக்கத் துறை வழக்குத் தகவல் அறிக்கை (ECIR) பதிவு செய்தது. அதேபோல், ஷாஜகான் ஷேக் உடன் தொடர்புடைய மேற்கு வங்க தொழில் அதிபரின்...














