Home 2024
Yearly Archives: 2024
புதுக்கடை: ஓய்வு பெற்ற ஆசிரியர்மீது தாக்கு 2 பேர் மீது வழக்கு
மாராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்சன் (80). ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவலால் (25), லாறன்ஸ் (55) ஆகியோருக்கும் ஆசிரியரின் வேலியைப் பிரித்தது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று ஜார்ஜ் வில்சனை ஜீவலால், லாறன்ஸ் ஆகிய இரண்டுபேரும் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஜார்ஜ் வில்சன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தக்கலை: விவசாயியை தாக்கியதாக வாலிபர் கைது
தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (56) விவசாயி. இவருக்கு தக்கலை அடுத்த வெள்ளரி ஏலாவில் வாழைத் தோட்டம் உள்ளது. நேற்று (டிசம்பர் 29) காலையில் கிருஷ்ணன் தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, வழியில் அதே பகுதியை சேர்ந்த இறக்சிக் கடையில் வேலை பார்க்கும் இர்ஷத் (32) என்பவர் மது குடித்துக் கொண்டிருந்தார். இதை கிருஷ்ணன் தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இர்ஷத் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் கிருஷ்ணனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கிருஷ்ணன் சிகிச்சைக்காக தக்கலை...
கருங்கல்: பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த 2 பேர் கைது
கருங்கல் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கருங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்கல் வேன் நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் ஒருவர் மது குடித்துக் கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதி கொல்லங்குடி விளையை சேர்ந்த மணிகண்டன் (57) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதே போன்று அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் என்பவர் தலைமையிலான போலீசார் நடத்திய...
மெதுகும்மல்: இந்து சமய வகுப்பு மண்டல ஆண்டு விழா
கிள்ளியூர் தொகுதி மெதுகும்மல் கோவில் மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா இன்று 29ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சி துவக்கமாக அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. மெதுகும்மல் ஊராட்சித் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அதங்கோடு கோயில் பொருளாளர் ராஜூ கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த ஆண்டு விழா துவக்க நிகழ்ச்சியில் பங்கலாட்சி செல்லசுவாமி திருவிளக்கேற்றி வைத்தார்.
அதன்பின்னர் மண்டல அளவிலான சமய வகுப்பு மாணவர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கறச்சிவிளை கோயில்...
நித்திரவிளை: அரசு பஸ் கண்ணாடி உடைத்த 3 பேர் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஸ்டார் (47). அரசு பஸ் ஓட்டுநர். இவர் நேற்று மாலை 3 மணி அளவில் மார்த்தாண்டத்தில் இருந்து தடம் எண் 81 என்ற அரசு பஸ்சை இரயுமன்துறைக்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
விரிவிளை பகுதியில் செல்லும்போது பைக்கில் வந்த 3 பேர் பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது பஸ்சின் அடியில் விழுந்துள்ளனர். இதைப் பார்த்த பயணிகள் சத்தம் போடவே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பொதுமக்கள் பைக்குடன் விழுந்தவர்களை மீட்டனர். அப்போது 3 பேரும் அதிகமான மதுபோதையில் இருந்ததும்,...
நடிகர் ராம் சரணுக்கு 256 அடி உயர கட்-அவுட்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. இதில், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஜன. 10 -ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ராம் சரணுக்கு 256 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடிகர்களுக்காக வைக்கப்பட்ட கட்-அவுட்களிலேயே இது மிகவும் உயரமானது என்கிறார்கள்.
‘த பேட்மேன்’ 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளி வைப்பு
மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம், ‘த பேட்மேன்’. ராபர்ட் பேட்டின்சன், ஜுயி கிராவிட்ஸ், பால் டனோ, ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது. காவல்துறை மற்றும் பேட்மேனுக்கு கடும் சவாலாக இருக்கிறான், ஒரு சீரியல் கில்லர். தனது சாகசத்தோடு, துப்பறியும் திறனையும் கொண்டு குற்றவாளியை பேட்மேன் பிடிப்பதுதான் படம்.
இது உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மாட் ரீவ்ஸ் இயக்கும் இதில் ராபர்ட்...
ஓட்டல் அறையில் இருந்து நடிகர் திலீப் சங்கர் சடலமாக மீட்பு
மலையாள நடிகர் திலீப் சங்கர் சடலமாக ஓட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். மலையாள திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தவர், திலீப் சங்கர்.
‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவர், அம்மா அறியாதே, சுந்தரி, பஞ்சாக்னி உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சில நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.
அறையிலிருந்து துர்நாற்றம் வந்ததைக் கண்டு, ஓட்டலில்...
‘ராஜாகிளி’ – திரை விமர்சனம்
கை வைத்த தொழில்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டுபவர் முருகப்பா சென்ராயர் (தம்பி ராமையா). மனைவி இருக்கும்போதே, தனது ஊழியரான வள்ளிமலரை இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். இவரது பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் பார்க்கும் மற்றொரு பெண்ணான விசாகா, தனது காதல் கணவன் ஆல்பர்ட்டின் (பாடகர் கிருஷ்) குடும்ப வன்முறையிலிருந்து தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறார். முருகப்பாவின் அறிவுரைக்கு அடங்க மறுத்து பிளாக்மெயில் செய்யும் ஆல்பர்ட்டை, கொலைசெய்யும்படி தன் ஆட்களை அனுப்புகிறார். பிறகு முருகப்பாவின் வாழ்க்கை என்னவாகிறது என்பது கதை.
இக்கதையில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே என்கிற...
ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட 16-வது கிராமோத்சவ விளையாட்டு திருவிழா நிறைவு
ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட 16-வது கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா நேற்று நிறைவடைந்தது.
ஈஷா சார்பில் கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா நடப்பு மாதம் தொடங்கியது. முதல்கட்ட போட்டிகள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 162 இடங்களில் நடத்தப்பட்டன. இதில் 5 ஆயிரம் அணிகளைச் சேர்ந்த 43,144 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான போட்டிகள் 6 இடங்களில் நடத்தப்பட்டன. இவற்றில் 136 அணிகளும், 1,000-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்....














