Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மானிய விலை எல்பிஜி, பெண்களுக்கு உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிட முடிவு

காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் மீண்டும் கூடி கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் தந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிக்கையில் பெண்கள்,...

பிரதமர் மோடியின் நிர்வாக செயல்பாட்டுக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு

பிரதமராக மோடியின் செயல்பாடு தொடர்பான ஆய்வை இப்சாஸ் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 75 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 65 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். பிரதமர் மோடிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் மோடியின் செயல்பாடு மீதான ஆதரவு 60 சதவீதமாகவும், 2023 பிப்ரவரியில் 67 சதவீதமாகவும் செப்டம்பரில் 65சதவீதமாக இருந்தது. இந்நிலையில், தற்போது அது 75 சதவீதமாக...

மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் மாத ஊதியம் ரூ.8,250-ல் இருந்து ரூ.9,000 ஆக அதாவது ரூ.750 உயர்த்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்களின் ஊதியம் மாதம் ரூ.500 உயர்த்தப்படும். இதுவரை மாதம் ரூ.6,000 பெற்று வந்த இவர்கள், இனி ரூ.6,500 பெறுவார்கள். அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்களின் பணி பெருமை அளிப்பதாக உள்ளது’’ என்று மம்தா கூறியுள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பதிவில், “ஆஷா மற்றும் அங்கன்வாடி...

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஎன்-எஸ்பிஏசி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதை 2040-ம் ஆண்டுக்குள் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள் இதை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் திறன் நம்மிடையே உள்ளது. நான்கைந்து ஆண்டுகளுக்கு...

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை | சிபிஐ.யிடம் ஷாஜகானை ஒப்படைத்தது மே.வங்க போலீஸ்

மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை, திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஷாஜகான் ஈடுபட்டுவந்தார். உயர்நீதிமன்றம் விடுத்தகெடுவையடுத்து ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார்சமீபத்தில் கைது செய்தனர். இந்நிலையில் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்போவதாக மேற்கு வங்க அரசு...

தமிழ் அலுவல் மொழி விவகாரத்தில் தலையிட முடியாது: அரசிடம் முறையிட உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மற்றும் வழக்காடும் மொழியாக்கக்கோரி வழக்கறிஞர் பகவத்சிங் தலைமையில் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் என 24 பேர் கடந்த பிப்.28-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக வழக்கறிஞர் அணி செய்தி தொடர்பாளருமான கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு...

போக்குவரத்து ஊழியர்களுக்கு மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உறுதி

பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன. இதுதொடர்பாக நடந்த பலகட்ட சமரசப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில்...

நாட்டை காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அன்று தமிழகத்தை காத்த நிலையில், இன்று நாட்டை காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டசமூக வலைதளப்பதிவில் கூறியிருப்ப தாவது: மார்ச் 6 - இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள். பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள். அன்று தமிழகத்தைக் காத்தோம். இன்றுமொத்த இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையையும் பன்முகத்...

பெண்கள் பாதுகாப்புக்கான உதவி மைய எண் மற்றும் எழுத்து வடிவில்: 5,050 பெண் போலீஸார் திரண்டு உலக சாதனை

பெண்கள் பாதுகாப்புக்கான உதவி மைய எண்கள் மற்றும் எழுத்து வடிவில் 5,050 பெண் போலீஸார் ஒரே நேரத்தில் திரண்டு உலக சாதனை படைத்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரும் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக சாதனை மேற்கொள்ளவும் சென்னை போலீஸார் முடிவு செய்தனர்.இதற்காக நேற்று மாலை சென்னை காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான 5,050 பெண் போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கூடினர். பின்னர், அவர்கள் பெண்கள்...

தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம்; வழக்கறிஞர்களின் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு: அரசின் உறுதிமொழி ஏற்பு

சென்னை, உயர்நீதிமன்றத்தில் தமிழைவழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே கடந்த மாதம்28-ம் தேதி வழக்கறிஞர் பகத்சிங் தலைமையிலும், வழக்கறிஞர் பாவேந்தன்ஒருங்கிணைப்பிலும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரிமாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என24 பேர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரு வாரத்துக்கு மேலாக அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை

தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...

நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...

இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம்...