Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர்மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலு பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று...

இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா. விருது

இந்திய ராணுவ அதிகாரி மேஜர்ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023-ம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது இன்று வழங்கப்படுகிறது. ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. ஐ.நா. சபை அமைதி காக்கும் சர்வதேச நாளான இன்று (மே 30), மேஜர் ராதிகா சென்னுக்கு நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் விருது...

குழந்தைகளை விற்ற 8 பேர் கொண்ட கும்பல் கைது: வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து 16 குழந்தைகள் மீட்பு

குழந்தைகளை சட்டவிரோதமாக விற்ற கும்பலைச் சேர்ந்த 8 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். வளர்ப்பு பெற்றோரிடமிருந்து 16 குழந்தைகளை மீட்டுள்ளனர். இதுகுறித்து ஹைதராபாத் ராச்சகொண்டா போலீஸ் ஆணையர் தருண் ஜோஷி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபிர்ஜாதி கூடா பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆர்எம்பி டாக்டர் ஷோபா ராணி, ஒரு பெண் சிசுவை ரூ. 4.5 லட்சத்துக்கு வேறொரு தம்பதியினருக்கு தரகர்மூலம் சட்டவிரோதமாக விற்றுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் டாக்டர் ஷோபா ராணி மற்றும் மேலும் இருவரை மேடிபல்லி போலீஸார்...

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள‌ பிரஜ்வல் ரேவண்ணா இன்று நாடு திரும்புகிறார்: கைது செய்ய போலீஸார் தீவிரம்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌. ஒரு மாதம் தலைமறைவு: இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம்...

பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு சவாலாகும் மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால் ஆளும் ஆம் ஆத்மிக்கு இத்தேர்தல் சவாலாகியுள்ளது. பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாபில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பறித்தது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்த போதிலும் பஞ்சாபில் தனித்து போட்டியிடுகின்றன. இவற்றுடன் சுமார் 28...

நகரியில் 3-வது முறையாக ரோஜா வெற்றி பெறுவாரா? – லட்சக்கணக்கில் பந்தயம்

ஆந்திர அரசியலில் ‘ஃபயர்பிராண்ட்’ என்று அழைக்கப்படு பவர் நடிகையும் அமைச்சருமான ரோஜா. அரசியலில் காலூன்ற கணவர் ஆர்.கே செல்வமணியின் ஒத்துழைப்பே முழு காரணம் என அடிக்கடி ரோஜா சொல்வதுண்டு. தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ரோஜா, பின்னர் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் அவர், தமிழக எல்லையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியில் 2014-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வரானார். இதனை தொடர்ந்து 2019-ல் 2-வது முறையாக வெற்றியை...

வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4-ம்தேதி நடைபெறுகிறது. இதற்காகஅதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி, முகவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல்...

சாலையோரம் கிடந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த முதியவர்: காவல் ஆணையர் அழைத்து பாராட்டு

சென்னை நந்தம்பாக்கம், 2-வது தெரு, ஏழுகிணறு பகுதியைச்சேர்ந்தவர் சங்கரன் (69). இவர்கடந்த 26-ம் தேதி புனித தோமையர் மலை, ஓடிஏ ருத்ரா ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் கிடந்த கவரை எடுத்துப் பார்த்தபோது, அதில் ரூ.37,500 இருந்தது. சங்கரன் அந்தப் பணத்தை புனித தோமையர் மலை (பரங்கிமலை) காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்பணம் யாருடையது? என சம்பவ இடம் மற்றும்அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராகாட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சாலையோரம் கண்டெடுத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் சங்கரனின் நேர்மையை...

கோயம்பேட்டில் உரிமம் புதுப்பிக்காத 67 கடைகளுக்கு சீல்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) நிர்மாணிக்கப்பட்ட கோயம்பேடு மொத்தவிற்பனை அங்காடி வளாகம், அங்காடி நிர்வாகக் குழுவால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி, வளாகக் கடைகள் அனைத்தும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவற்றுக்கான உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, கடந்த 2021-24-ம் தொகுப்பாண்டிற்குரிய உரிமம் புதுப்பிக்காதவர்களை கண்டறிந்து, கடைகளைமூடி முத்திரையிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை, மொத்தமாக 60 கடைகள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மலர் அங்காடியில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, உத்தரவின்...

பாதுகாப்பு குறைபாடு காரணமாக 409 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்க மறுப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி வாகனங்களை சோதனை செய்வது வழக்கம். இதில் போக்குவரத்து, காவல், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, சாலையில் செல்லும் வகையில் வாகனம் தகுதியானதாக உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்வர். அதன்படி, நடப்பாண்டுக்கான சோதனை பணிகளும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. சென்னையில் 4,624 பள்ளிவாகனங்கள் உள்ளன. இவற்றில்3,243 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், குறைபாடுஉள்ள 409 வாகனங்களுக்கு தற்காலிகமாக தகுதிச்சான்று வழங்கமறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வரும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: வாக்குப்பதிவை வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி

சட்டமன்ற தேர்தலையொட்டி 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை...

குளச்சல்: காரால் மோதி பெண் கொலை முயற்சி – கைது

குளச்சல் பகுதியைச் சேர்ந்த சுபசந்தியா (38) என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் சிம்சன் ராஜ் (55) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக இரணியல்...

தக்கலை: நர்சிங் மாணவி பலி – நாதக போராட்டம்

தக்கலை: நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் தக்கலை அருகே நர்சிங் மாணவி கிளாட்லின் அபினா, தனது தந்தையுடன் திருச்சிக்கு பஸ் ஏற பைக்கில் சென்றபோது, போலீஸ் நிலையம் எதிரில் டாரஸ்...