Home 2024
Yearly Archives: 2024
சீன, பாக்., சவால்கள் என்ன? – மீண்டும் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெய்சங்கர் விளக்கம்
வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் இன்று (ஜூன் 11) பொறுப்பேற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் முந்தைய ஆட்சியில் தாங்கள் வகித்த அதே இலாகாவை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் முறைப்படி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய ஜெய்சங்கர், “மீண்டும் ஒரு முறை வெளியுறவு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். கடந்த ஆட்சியில் வெளியுறவு அமைச்சகம் வெகு சிறப்பாகச்...
99 காங்கிரஸ் எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: குடியரசு தலைவருக்கு டெல்லி வழக்கறிஞர் கடிதம்
சட்டத்தை மீறி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவோம் என காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டை வழங்கியதால், அக்கட்சியின் 99 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என டெல்லி வழக்கறிஞர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு...
ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நுகர்வோர்முன்பு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று கட்டி வந்தனர்.
செயலிகள் வழியாக.. பின்னர், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நுகர்வோர்ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தலாம். மேலும், கூகுள் பே, யூபிஐ உள்ளிட்ட செயலிகள் வழியாக செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த...
நாளை சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்
சட்டப்பேரவையில் துறைகள் தோறும் மானிய கோரிக்கை விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதானவிவாதம் நடைபெற்றது. இறுதிநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதிலளித்தார்.
இதையடுத்து, இந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19-ம் தேதியும்,...
கிராம சுகாதார பணியாளர்கள் 2,500 பேர் விரைவில் நியமனம்: சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி
தமிழகத்தில் 2,500 கிராம சுகாதார பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், அஞ்சலக வங்கிக் கணக்கு எண் ஆகிய சேவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணைஆணையர் (கல்வி) ஷரண்யாஅறி, மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், மோகன்குமார், சுப்பிரமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில்...
கோவையில் ஜூன் 15-ல் முப்பெரும் விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தகவல்
கோவையில் ஜூன் 14-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா, ஜூன் 15-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 8-ல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு, 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச்சென்ற முதல்வர்...
கஞ்சா வழக்கில் மனைவி கைது: பாமக மாவட்ட நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை புரசைவாக்கம் தாண்டவம் தெருவை சேர்ந்த பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் சரவணன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அதனால், ஜூன் 10-ம் தேதி (நேற்று) முதல் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். கட்சியினர் அவருடன் எவ்வகையிலும் தொடர்பு வைத்துக்கொள்ள...
“நாட்டுக்கு காத்திருக்கும் அற்புதமான எதிர்காலத்துக்காக…” – பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து
3-வது முறையாக பொறுப்பேற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை சரியாக 7.23 மணிக்கு நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால்...
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜூன் 14-ல் இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதிஅரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த...
ரிஷப் பந்தின் பேட்டிங், பும்ராவின் வேகம்: இந்தியா பக்கம் திரும்பிய ஆட்டம்!
நியூயார்க்கின் புதிர் பிட்சில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற, இந்தியா - பாகிஸ்தான் போட்டி வழக்கம் போல் அதற்குரிய நாடகீயங்களுடன் அரங்கேறியது. அது ரசிகர்களின் ஆவலைப் பெரிதும் தூண்டியது.
குறிப்பாக 15-வது ஓவரில் பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் பாலமாக ஆடி வந்த முகமது ரிஸ்வான் ஸ்டம்புகளை பும்ரா பெயர்த்த அந்தத் தருணம் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது.
அந்தத் தருணம் ஒரு குறிப்பிட்ட விசேஷத் தருணம் என்றால் போட்டி முழுவதுமே பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் காலத்திய மேற்கு இந்தியத் தீவுகள்...














