Home 2024
Yearly Archives: 2024
ஜம்முவில் இரு வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் – என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மட்டுமே இரண்டு தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நேற்று இரவு ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை இந்த சண்டை நீட்டித்து வருகிறது. சத்தர்கலா பகுதியில் உள்ள ராணுவ தளத்தில்...
24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை: ஒடிசாவின் புதிய முதல்வருக்கு பங்களா தேடும் அதிகாரிகள்
கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின்முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு அரசு குடியிருப்பு இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தார். இதனால் பாஜகவின் புதிய முதல்வருக்காக அம்மாநில அதிகாரிகள் அரசு குடியிருப்பை தேடி வருகின்றனர்.
கடந்த 2000-ம் ஆண்டில் ஒடிசா முதல்வரானார் நவீன் பட்நாயக். அப்போது அவர் அரசு குடியிருப்பிற்கு மாறவில்லை. அவர், தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக், புவனேஸ்வரில் கட்டிய புதிய பங்களாவில் குடியிருந்தார். ‘நவீன்நிவாஸ்’ எனும் பெயரிலான அந்தபங்களா முதல்வர் குடியிருப்பாக கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. முதல்வர்...
சந்திரபாபு நாயுடு அரசில் 24 அமைச்சர்கள் – துணை முதல்வராகிறார் பவன் கல்யாண்
சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு...
‘சதி, நம்பிக்கை துரோகமே காரணம்’: உ.பி-யில் தோல்வி குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி குறித்து அதன் தேசிய தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், தொகுதிகளில் கட்சியினரும், தலைவர்களும் செய்த சதியும், நம்பிக்கை துரோகமும் தோல்விக்கானக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் அதிக வெற்றியை பாஜக எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. இதன் கூட்டணிகளில் ராஷ்டிரிய லோக் தளம் 2 மற்றும் அப்னா தளம் 1 தொகுதிகளும் கிடைத்தன. அதேநேரம், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 மற்றும் சுயேட்சை...
குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே தமிழகத்துக்கு பொற்காலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழகத்துக்கு பொற்காலம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி ‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தைப் பருவத்தில், தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்டநேரம் உழைப்பது மிகவும் கொடுமையானதாகும்....
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 14 முதல் தமிழகத்தில் இயங்க தடை: போக்குவரத்துத் துறை நடவடிக்கை
தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும், இவ்வகை பேருந்துகளைபயணிகள் தவிர்க்கவும் போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி? – பாஜகவுடன் பேச்சுவார்த்தை
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள பாமக, கூட்டணியில் உள்ள பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திமுகவை சேர்ந்த புகழேந்தி. மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார். ஏப்ரல் 8-ம் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர்...
அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள்: காவல் துறை மீது ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி
அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் காவல்துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்குகள் நேற்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு...
மின் கட்டணம் உயர்வு குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி: தமிழக அரசு விளக்கம்
மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின்கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில், மின்வாரியத்துக்கு வரவைவிட செலவு அதிகம் உள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே,...
3-வது முறை பதவியேற்ற பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் வாழ்த்து
தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்தமக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 293 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது
இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின்பிரதமராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இதற்காக, மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் பாஜகவெற்றி பெற்று 6 நாட்களுக்குப்...














