Home 2024
Yearly Archives: 2024
களியக்காவிளை: 20 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது
குமரி மாவட்டம் வழியாக வட மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாறசாலை ரயில் நிலையத்தில் ரயிலில் சந்தேகமான முறையில் அமர்ந்திருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் சோதனை செய்தபோது பண்டல் பண்டலாக சுமார் 20 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
போலீசார் நான்குவரையும் பிடித்து...
மார்த்தாண்டம்: கடைக்குள் போதையில் மயங்கிய நகை தொழிலாளி
குழித்துறையை சேர்ந்தவர் தேசிங்குராஜா (55) இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். தேசிங்குராஜா மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் தனியார் காம்ப்ளக்ஸ் முதல் மாடியில் நகை பட்டறை வைத்துள்ளார். பணி அதிகமாக இருக்கும் போது இரவு வேளையில் இந்த கடையில் தேசிங்குராஜா தூங்குவது வழக்கம். அப்போது தனது மனைவிக்கு தகவல் கொடுப்பதுண்டு.
நேற்று முன்தினம் இரவு தேசிங்குராஜா வீட்டுக்கு செல்லவில்லை. பட்டறைகுள் போதையில் மயங்கி விட்டார். மனைவி போன் செய்து பார்த்தும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஷட்டரை திறந்து வெளியே...
கொல்லங்கோடு: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பெருமளவு லஞ்சம் புரண்டோடுகிறது. குறிப்பாக அனுமதி இல்லாத சொத்துக்களை பதிவு செய்வதும் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மீண்டும் ஆவணங்களை விடுவிப்பது அதற்காக பல ஆயிரங்கள் முதல் லட்சங்களில் லஞ்சம் பெறுவது தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில் கொல்லங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் பெருமளவு லஞ்சம் கை மாறுவதாக கிடைத்த தகவலின் படி குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் நேற்று 23-10-2024...
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேச்சு போட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் நிதி மூலமாக கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள் நேற்று நடந்தன. போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் பிரகாசி அருள்ஜோதி தலைமை தாங்கினார். பேராசிரியை ஆனந்த நாயகி வரவேற்றார்.
பேராசிரியை சுகிர்தா பஸ்மத் முன்னிலை வகித்தார். போட்டியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும்,...
‘அமரன்’ போர் பற்றிய படம் இல்லை! – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேர்காணல்
தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’. காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் ‘பயோபிக்’ இது. படத்துக்காக முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்காவாக மாறியிருக்கிறார், சாய் பல்லவி. காதலும் காஷ்மீரில் ஆக்ஷனும் என மிரட்டுகிறது படத்தின் டிரெய்லர். படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் பேசினோம்.
ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்’ புத்தகம்தான் ‘அமரன்’ உருவாகக் காரணமா?
ஆமா. சோனி பிக்சர்ஸ் அந்தப் புத்தகத்தோட உரிமையை வாங்கி வச்சிருந்தாங்க. வீரமரணமடைந்த சில...
நிலவு ஒரு பெண்ணாகி… – அசர வைக்கும் நிமிஷா சஜயன் க்ளிக்ஸ்!
மலையாளம், தமிழ் என கலக்கிக் கொண்டிருக்கும் நிமிஷா சஜயன் இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களின் வாயிலாக ரசிகர்களை அசரடித்துக் கொண்டிருக்கிறார்.மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன்.தமிழில் ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘மிஷன்’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக புகழப்படும் நிமிஷா, ’தி கிரேட் இண்டியன் கிச்சன், ‘மாலிக்’, ‘தொண்டிமுதலும் திரிக்ஷாக்ஷியும்’, ‘நாயாட்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் பேசப்பட்டார்.2019ஆம் ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.இதுதவிர பிலிம்ஃபேர், கேரளா பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேஷன்...
நஸ்ரியா – பசில் ஜோசப்பின் ‘சூக்ஷமதர்ஷினி’ படம் நவ. 22-ல் ரிலீஸ்!
4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் நஸ்ரியாவின் ‘சூக்ஷமதர்ஷினி’ திரைப்படம் வரும் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா, நானி நடிப்பில் வெளியான ‘அன்டே சுந்தராணிகி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளாக நஸ்ரியா நடிக்கும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. அவரின் கம்பேக்குக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் பசில் ஜோசப்புடன் இணைந்து...
ஹாக்கியில் இந்தியா தோல்வி
இந்தியா - ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஜெர்மனி அணி தரப்பில் 4-வது நிமிடத்தில் ஹென்ரிக் மெர்ட்ஜென்ஸும், 30-வது நிமிடத்தில் லூகாஸ் விண்ட்ஃபெடரும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது.
இரு அணிகளும் இன்று 2-வது மற்றும் கடைசி போட்டியில் பிற்பகல்...
சென்னை – கோவா இன்று பலப்பரீட்சை | ஐஎஸ்எல்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25ம் ஆண்டு சீசனில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று (24-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எஃப்சி கோவா, 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகளை பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் சென்னையின் எஃப்சி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு...
டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே உலக சாதனை: 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசிய சிக்கந்தர் ராசா
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று தொடரில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது ஜிம்பாப்வே. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசினார்.
கென்யாவின் நைரோபியில் உள்ள ருவாரகா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் புதன்கிழமை (அக்.23) நடைபெற்ற ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் காம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இதில்...














