Home 2024
Yearly Archives: 2024
சோழர்கள் காலத்திலிருந்தே இருந்தாலும்கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்தாலும்கூட அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை அருகே திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து...
எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்படுத்திய சிபிசிஎல்-க்கு ரூ.73 கோடி அபராதம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. எண்ணெய் படலம் படிந்து பறவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும் மீன்பிடி படகுகள், வலைகள் மீது பிசின் போன்ற கரிய நிற பெட்ரோலியக்கழிவு படிந்து பாழாகின. குடியிருப்புசுவர்கள், தெருக்கள், நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது.
அதைத்தொடர்ந்து,...
முதல்வர், துணை முதல்வர் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதி வேண்டும் – ஆளுநரிடம் பாஜக கோரிக்கை
தமிழக முதல்வர், துணை முதல்வர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
மெரினா லூப் சாலை மேற்கு பகுதியில் மீன் விற்க அனுமதி: நொச்சிக்குப்பம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
மெரினா லூப் சாலை மேற்கு பகுதியில் மீன் விற்க அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் அறிவித்தனர்.
சென்னை, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், லூப் சாலை மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சந்தையில் கடைகள் வழங்கப்பட்டன. மற்றொரு பகுதியினருக்கு கடைகள் ஒதுக்காத நிலையில், அப்பகுதியில் வியாபாரம் செய்யத் தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 21-ம் தேதி முதல் நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களுக்கு லூப் சாலை மேற்கு பகுதியில் மீன் விற்க அனுமதி தர வேண்டும்...
பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்; மேலும் 50 பேருக்கு சம்மன்
பண மோசடி வழக்கின் விசாரணைக்காக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். இந்த வழக்கில் மேலும் 50 பேருக்கு சம்மன் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான...
குமரி: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் இன்று (அக். 24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகர்கோவில்: பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுடன் தீயணைப்புத் துறையினர் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் இன்று (அக். 24)நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடை வியாபாரிகள் பட்டாசுகளை எவ்வாறு வைத்து விற்பனை செய்ய வேண்டும், விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் அவர்களுக்கு விளக்கினர்.
தக்கலை: கோயில்களின் உண்டியல்களை உடைத்து திருடியவர் கைது
தக்கலை அருகே பறைக்கோடு பகுதியில் கன்னிமூல கணபதி கோயில் உள்ளது. கடந்த 15ஆம் தேதி இந்த கோயிலுக்குள் புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய் கொள்ளை அடித்து தப்பி சென்றார். அந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக கோயில் பொருளாளர் கோயில் நிர்வாகி ஐயப்பன் என்பவர் தக்கலை போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பறைக்கோடு ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயிலில் அதிகாலை 2...
குமரி: பொதுமக்களிடம் நேரில் மனு வாங்கிய குமரி எஸ்.பி
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அந்த மனு தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொண்டார். இதேபோல ஒவ்வொரு போலீஸ் சரகங்களுக்கு உட்பட்ட மனுகளை அந்தந்த சரக போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வாங்கி விசாரணை மேற்கொண்டனர்....
தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த 1, 350 டன் ரேஷன் அரிசி
குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தஞ்சாவூரில் இருந்து 1, 350 டன் ரேஷன் அரிசி மூடைகள் ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சரக்கு ரெயிலில் 35 வேகன்களில் இந்த அரிசி வந்துள்ளது. பின்னர் அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.














