Google search engine
Home 2024

Yearly Archives: 2024

3 மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் மறுப்பு

 உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் மீதுநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சில மாநிலங்களில் குற்றச் செயலில்ஈடுபடுவோருக்கு சொந்தமான கட்டிடங்களை (விதிகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி) உள்ளாட்சி நிர்வாகத்தினர் இடித்தனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இதுபோன்ற கட்டிடங்களை இடிக்கக் கூடாது என செப்டம்பர் 17-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், “ஹரித்வார் (உத்தராகண்ட்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் கான்பூர்...

மருது சகோதரர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாள்: ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 223-வது நினைவு நாளையொட்டி அவர்களது உருவப் படத்துக்கு ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். விடுதலை வீரர்கள் மருது பாண்டியர்களின் 223-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கிண்டி எம்ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் உருவப் படத்துக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில்,...

இந்தோ – திபெத் எல்லை படைப்பிரிவின் நிறுவன நாளில் பிரதமர் மோடி வாழ்த்து

இந்தோ-திபெத் எல்லை படைப்பிரிவின் நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்தரி மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்தியா, சீனா இடையே 1962-ல் போர் நடைபெற்றது. இந்தப் போருக்குப் பிறகு அதே ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சீனாவுடனான 3,488 கி.மீ. நீளம் கொண்ட எல்லையில் ஐடிபிபி படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐடிபிபி நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஐடிபிபி நிறுவன நாள்...

நீதி தேவதை சிலையில் மாற்றம்: உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு

நீதி தேவதை சிலை மற்றும் சின்னத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எஸ்சிபிஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாற்றம் தொடர்பாக கருத்து கேட்கப்படவில்லை என அந்த சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதிகளின் நூலகத்தில் ஆறடி உயரம் கொண்ட நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. பழைய சிலையுடன் ஒப்பிடும்போது புதிய சிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, பழைய நீதி தேவதையின் கண்கள் துணியால் கட்டப்பட்டிருந்த நிலையில், புதிய சிலையில் கண்கள் துணியால் மூடப்படவில்லை. ஒரு கையில்...

120 கி.மீ வேக காற்றுடன் கரையைக் கடந்தது டானா புயல்: ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை

புவனேஸ்வர் / கொல்கத்தா: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டானா புயல் கரையைக் கடந்தது. வியாழக்கிழமை இரவு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை கரையைக் கடந்தது. வடக்கு ஒடிசா கடற்கரை அருகே உள்ள பிதர்கனிகா மற்றும் தாமரா இடையே அதிகாலையில் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 120 கி.மீ பலத்த காற்றுவீச தீவிர புயலாகக் கரையைக் கடந்தது. 6 மணி நேரம் புயல் கரையைக் கடந்தது இதனால் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது....

மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்

இந்தியா - இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று இலங்கை அதிபரின் செயலர் கலாநிதி நந்திக குமாநாயக்கவிடம் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் 61 தமிழக படகுகளை சிறைபிடித்து, 450 மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் 88 மீனவர்களுக்கு6 மாதம் முதல் 2 ஆண்டு வரைதண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறைபிடிக்கப்படும் படகுகளை நாட்டுடைமை ஆக்குவது, மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது, அபராதம் கட்டத் தவறினால்...

போக்சோ வழக்குகளை கையாள்வது எப்படி? – பெண் ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

போக்சோ வழக்கில் புலன் விசாரணையின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்தார். இதில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணிகண்ட ராஜூ கலந்துகொண்டு ‘போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட...

மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது: அக்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வரும் டிச.3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் பிரிவில் 10 விருதுகளும், ஹெலன் கெல்லர் விருது பிரிவில் 2...

பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

கல்வியில் அரசியலை கலக்கக் கூடாது என்றும், பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார். சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆளுநரின் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார்கள். சாதாரண நிகழ்ச்சியிலோ, பொது நிகழ்ச்சியிலோ ஆளுநர்...

தீபாவளி சிறப்பு ரயில்களில் முக்கிய நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதுதவிர, தாம்பரம் - கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களில் முக்கிய நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயிலில் (06001) டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதற்கடுத்து காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, ‘ரெக்ரெட்’ என்று காட்டியது. அதேநேரத்தில், நவ.5-ம் தேதிக்கு டிக்கெட்கள் உள்ளன. மறுமார்க்கமாக, கன்னியாகுமரி -...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...