Google search engine
Home 2024

Yearly Archives: 2024

இந்திய மகளிர் ஹாக்கி முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு

புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 29 வயதாகும் ராணி ராம்பால், 2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 4-வது இடம் பெற உதவியவர். 16 ஆண்டுகளாக ஹாக்கி விளையாடி உள்ளார் ராணி ராம்பால். இந்திய அணிக்காக 254 போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் 205 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது, பத்ம விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

ஹாக்கியில் ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய அணி

புதுடெல்லி: ஜெர்மனி அணிக்கெதிரான 2-வது ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்றது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய அணிக்காக சுக்ஜீத் சிங் 2 கோல்களும் (34, 48-வது நிமிடம்), ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களும் (42, 43-வது நிமிடம்), அபிஷேக் ஒரு கோலும் (45-வது நிமிடம்) அடித்தனர்.இதையடுத்து ஹாக்கி டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து தொடரை...

ஒடிசா அருகே கரையை கடக்கத் தொடங்கியது டானா புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்

 ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் டானா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து கிழக்கு வடகிழக்கே 50 கி.மீ தொலைவிலும், தாமராவில் இருந்து 40 கி.மீ தென்கிழக்கே மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில் இருந்து 160 கி.மீ தென்மேற்கிலும் நிலைகொண்டிருந்தது. இந்த சூழலில் நள்ளிரவில் கரையைக் கடக்க தொடங்கிய இந்த புயல், இன்று (அக். 25) அதிகாலை வரை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நகர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து...

தீபாவளி, சாத் பூஜைக்கு 7000 சிறப்பு ரயில்கள்

தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்க உள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகைையில், “ இந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு தினமும் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணம் செய்யும் வகையில் 7,000 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்க உள்ளது" என்றார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு 4,500 சிறப்பு ரயில்கள்...

இந்தியா, சீனா இடையிலான உறவு மேம்படும்: மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை கருத்து

ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசியது இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் மிக முக்கியமானது என சீன கூறியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்கள் இடையே...

உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி போட்டி: கூட்டணி கட்சியான காங்கிரஸ் பின்வாங்கியது

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதியே போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கிடைத்த 2 தொகுதிகளையும் மறுத்துவிட்டது. இதன் பின்னணி வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் இண்டியா கூட்டணிக் கட்சிகளாக காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து உ.பி. சட்டப்பேரவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 4 தொகுதிகளை கோரிய நிலையில் சமாஜ்வாதி 2 தொகுதிகளை கொடுத்தது. தற்போது சமாஜ்வாதியே அனைத்து 9 தொகுதிகளிலும்...

ஆந்திரா, தெலங்கானா, பிஹார் மாநிலங்களில் ரூ.6,800 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரா, தெலங்கானா, பிஹார் ஆகிய 3 மாநிலங்களில் ரூ.6,798 கோடி மதிப்பிலான 2 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, பிஹாரில் சர்கத்தியா நர்கதியாகஞ்ச் - ரக்சால்- சீதாமர்ஹி - தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி - முசாபர்பூர் இடையே 256 கி.மீ. மற்றும் எர்ருபாளையம் - நம்பூரு இடையே அமராவதி வழியாக தெலங்கானாவையும் இணைக்கும் வகையில் 57 கி.மீ.க்கு புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. ஆந்திரா, தெலங்கானா, மற்றும் பிஹாரில் உள்ள 8 மாவட்டங்களில் இந்தத் திட்டங்களால் ரயில்வே கட்டமைப்பு மேம்படும்...

சென்னை உட்பட நாடு முழுவதும் ஒரே நாளில் 80 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெரும்பாலான மிரட்டல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அதிலும் குறிப்பாக எக்ஸ் வலைதளத்தின் வழியாக அதிகமான மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஏர் இந்தியா, விஸ்டாரா, இண்டிகோ நிறுவனங்களைச் சேர்ந்த தலா 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோன்று ஆகாஸா ஏர் நிறுவனம் தனது 14 விமானங்களுக்கு இதேபோன்ற மிரட்டலை எதிர்கொண்டது. நேற்று ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட...

அனல் பறக்கும் சென்னபட்டணா இடைத்தேர்தல்: பாஜக முன்னாள் எம்எல்சி காங்கிரஸ் சார்பில் போட்டி

கர்நாடகாவில் சென்னபட்டணா இடைத்தேர்தலில் பாஜக முன்னாள் எம்எல்சி யோகேஷ்வரை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அவருக்கு போட்டியாக மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் பாஜக, மஜத கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் சென்னபட்டணா இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னபட்டணா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சென்னபட்டணா தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம்...

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் உமர் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று முதல்வர் உமர் அப்துல்லாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இந்த சூழலில் அண்மையில் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கடந்த 16-ம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...