Home 2024
Yearly Archives: 2024
சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு: மாணவிகள் 39 பேர் மயங்கியதால் பரபரப்பு
திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்டன. சிலர் மயக்கமடைந்தனர். ஆசிரியர்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்,...
தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓபிஎஸ்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. ஆனால்,...
மார்த்தாண்டம்: காரில் கடத்திய 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி, தனி எஸ் ஐ மைக்கேல் சுந்தர்ராஜன் ஆகியோர் மார்த்தாண்டம் அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் நேற்று (அக்.,24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றது.
இதனை தொடர்ந்து வாகனத்தை துரத்தி சென்று சென்னித்தோட்டம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்தபோது சுமார் 2 ஆயிரத்து 200 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருப்பது...
நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண பயன்கள் கேட்டு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யாமல் நாகர்கோவில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களுக்கு உடனடியாக பணப்பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் நேற்று (அக்.,24) கோணம் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (45), தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி பிரேமலதா முத்துக்குமாரை விட்டு பிரிந்து கோவையில் உள்ள தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். முத்துக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (அக்.,23) இவர் பீச்ரோடு பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை...
நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண பயன்கள் கேட்டு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யாமல் நாகர்கோவில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களுக்கு உடனடியாக பணப்பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் நேற்று (அக்.,24) கோணம் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரணியல்: ஊராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
இரணியில் அருகே நுள்ளிவிளை ஊராட்சி 16 வது வார்டு மேல்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஊராட்சி நிர்வாகம் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
அதை போன்று தரமான சாலை வசதிகள் செய்து தரவில்லை, தெருவிளக்குகள் முறையாக அமைக்கவும் இல்லை எனவும், இந்த நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (அக்.,24) கண்டன் விளையில் அமைந்துள்ள நுள்ளி...
நித்திரவிளை: லாரி – சொகுசுகார் மோதல்; ஒருவர் படுகாயம்
புதுக்கடை அருகே உள்ள உதச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் குமார். இவர் நேற்று (அக்.,24) மேற்கு கடற்கரை சாலையில் தனது காரில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சாம்புறம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டாரஸ் டிப்பர் லாரி ஒன்று கிரிஷ் குமார் கார் மீது மோதியது.
இதில் சொகுசு கார் பின்னோக்கி தூக்கி வீசப்பட்டது. அப்போது சொகுசு காரின் பின்னால் நெய்யூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (44) என்பவர் வந்த பைக்கின் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீசன்...
‘ஆன்மாவை வருடும் காதல் கீதங்கள்’ – டூடுல் வெளியிட்டு பாடகர் கேகேவை கொண்டாடும் கூகுள்
மறைந்த பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு (கேகே) டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். மேலும் கேகேவின் பிரத்யேக ஓவியத்தின் கீழ், “இந்த டூடுல் ஆன்மாவை வருடும், காதல் பாடல்களைக் கொடுத்த பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தை கொண்டாடும் வகையில் வெளியிடப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1996-ல் அவர் இதே நாளில் (அக்.25) தான் தன் முதல் திரைப்படப் பாடலைப் பாடி பின்னணி பாடகராக அறிமுகமானார். Chhod Aaye Hum என்ற பாடலை மாச்சிஸ் திரைப்படத்தில் பாடி அவர் பிரபலமானார்.
பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட...
வாஷிங்டன் சுந்தர் அசத்தல் முதல் தடுமாறும் ரோஹித் வரை @ IND vs NZ புனே டெஸ்ட்
புனே: இந்தியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களைச் சாய்த்தார்.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் புனேவில் 2-வது போட்டி நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கே.எல்.ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
டாஸை வென்ற நியூஸிலாந்து...














