கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண பயன்கள் கேட்டு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யாமல் நாகர்கோவில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களுக்கு உடனடியாக பணப்பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் நேற்று (அக்.,24) கோணம் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.