Home 2024
Yearly Archives: 2024
2-வது டெஸ்ட் கிரிக்கெட் புனேவில் இன்று தொடக்கம்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா...
பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறோம்; போரை அல்ல! – ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திட்டவட்டம்
'பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது' என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்றார். அன்று மாலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைன் போருக்கு...
வயநாட்டில் ராகுலுடன் ரோடு ஷோ: வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பேரணியாக சென்ற அவர், 35 ஆண்டுகளில் முதல் முறையாக எனக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்றார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், கேரளா சென்றுள்ள பிரியங்கா நேற்று வயநாடு மாவட்ட தலைநகர் கல்பெட்டாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி திறந்த வாகனத்தில் பேரணியாக...
ஒடிசா அருகே நாளை கரை கடக்கிறது டானா புயல்: தயார் நிலையில் மீட்பு படை; 150-க்கும் மேற்பட்ட ரயில் ரத்து
வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை அதிகாலை கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் டானா புயலாக தீவிரமடைந்துள்ளது. இது நேற்று ஒடிசாவுக்கு தென் கிழக்கே 560 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் தென்கிழக்கு பகுதியில் 630 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
120 கி.மீ. வேகத்தில் காற்று: டானா புயல் மேலும் வலுவடைந்து ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின்...
புனேவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: நீதிமன்றம் கேள்வி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிகள் இருவரை, அங்கு பணியாற்றும் துப்புரவு தொழிலாளி அக் ஷய் ஷிண்டே என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றது. பெற்றோர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்திய பின் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர். பின் இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் என்கவுன்டரில் குற்றவாளி...
உத்தராகண்ட் மாநிலத்தில் தலைமறைவான 3 குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.5 பரிசு
உத்தர பிரதேச மாநிலம் ஜாபர்பூர் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி இரு கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இருதரப்பும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பொதுமக்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங், தினேஷ்பூரை சேர்ந்த மன்மோகன் சிங், உ.பி. மாநில ராம்பூரை சேர்ந்த சாஹப் சிங் ஆகிய 3 பேர் தலைமறைவாயினர்.
இந்நிலையில் மேற்கூறிய 3 முக்கிய குற்றவாளிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 அன்பளிப்பு வழங்கப்படும் என்று போலீஸார் நேற்று...
உயிர் சக்தி வேளாண்மை மூலம் மண்ணின் ஆரோக்கியம், விளைச்சலை மேம்படுத்தலாம்: வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் கருத்து
உயிர் சக்தி வேளாண்மை முறையின் மூலம் மண்ணின் ஆரோக்கியம், பயிர் விளைச்சலின் அளவை மேம்படுத்த முடியும் என பெங்களூருவில் நடந்த மாநாட்டில் வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாடு பெங்களூருவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் (Biodyanamic association of India) தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், கன்னட எழுத்தாளர் சித்தராமையா, உயிர் சக்தி...
மகாராஷ்டிர தேர்தல்: சிவசேனா முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சிவசேனா கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து முதல்வர் ஷிண்டேவுடன் இணைந்த 40 எம்எல்ஏ.க்களும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிவசேனா 45 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த தொகுதியான தானேவில் உள்ள கோப்ரி பச்பகாடி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவசேனா கட்சியில் தற்போதைய எம்எல்ஏ.க்களில் எம்.பி.க்கள் ஆனவர்களை தவிர மற்ற அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த எம்எல்ஏ.க்களின்...
ஜார்க்கண்ட் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்: ஜேஎம்எம், ஆர்ஜேடி பட்டியல் வெளியீடு
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்) ஆகிய இண்டியா கூட்டணி கட்சிகள் இத்தேர்தலை இணைந்து சந்திக்கின்றன. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட முடிவு செய்தன. எஞ்சிய 11 தொகுதிகளை ஆர்ஜேடி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. காங்கிரஸ்...
உ.பி.யில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம் புலந்த் சாஹரில் உள்ள சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், 9 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷாபுரி காலனியைச் சேர்ந்தவர் முகமது ரியாசுதீன் (50). இவரது மனைவி ருக்சானாவுக்கு (45) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 8...














