Home 2024
Yearly Archives: 2024
நாகர்கோவிலுக்கு 976 டன் நெல் வருகை
குமரி மாவட்ட பொது விநியோகத்திற்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் அரிசி மற்றும் நெல் வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து 976 டன் நெல் நேற்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அங்கிருந்து லாரிகள் மூலம் நெல் தனியார் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரவை செய்யப்பட்டு அரிசியாக நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நாகர்கோவில் அரசு பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்சிசி சார்பில் மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது புற்றுநோயின் அறிகுறிகள், அதைத் தடுப்பது போன்றவை குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். புற்றுநோய் பாதித்தவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அருமனை: 2 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை
அருமனையை அடுத்த செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று (7-ம் தேதி) சென்றிருந்தார்.
அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நான்கு கிராம் தங்க நகைகளை திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து அருகில் லதா என்பவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவையும் உடைத்து விலை உயர்ந்த பட்டு சாரிகளை திருடி சென்றுள்ளனர்.
சுரேந்திரன் மற்றும் லதா ஆகியோரின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு இந்த...
மார்த்தாண்டம்: சாலையில் தேங்கிய மழை நீர் – போராட்டம்
மார்த்தாண்டம் அருகே பயணம் என்ற பகுதியிலிருந்து திக்குறிச்சிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ஆற்றுப்பாலம் பகுதி வரை மிக குறுகலாக உள்ளது. இருபுறமும் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த சாலை வழியாக கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளால் சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.
தற்போது பெய்து வரும் தொடர்மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை சீரமைக்க அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த...
குழித்துறை: தேசிய நெடுஞ்சாலையில் எம்பி ஆய்வு
திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை முழுமையாக சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் குதித்துறை தனியார் ஆஸ்பத்திரி மட்டும் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி, அதில் வாலிபர்கள் நீந்திக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் விஜய் வசந்த் அம்பு நேற்று அந்த பகுதியில் வந்து அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, - கன்னியாகுமரி வரை சாலையை...
குழித்துறை: ரயில்வே கேட் கீப்பரை தாக்கி சிக்னல் உடைப்பு
நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே பாதையில் குழித்துறை ரயில் நிலையம் உள்ளது. இதில் குரும்பத்தூர் என்ற இடத்தில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று திருத்துவபுரத்தை சேர்ந்த பிளசன் (36) என்பவர் கேட் கீப்பராக பணியாற்றினார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் கும்பல் பிளசனை திடீரென தாக்கி, கேட் கீப்பர் அறையில் இருந்த பொருட்களை உடைத்து, தொடர்ந்து ரயில்வே பாதையில் இருந்த சிக்னலையும் உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார், களியக்காவிளை...
கீழ்குளம்: வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசகுளம் வாய்க்கால் உடைப்பால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் தண்ணீர் நிரம்பி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த பகுதியை பேரூராட்சி சார்பில் நேற்று (7-ம் தேதி) மணல் மூட்டை அடுக்கி அந்த உடைப்பை சரிசெய்தும் பணியினை கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் சென்று பார்வையிட்டனர். இவருடன் கீழ்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ரகுநாதன் மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் பி.கோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சூர்யாவின் ‘கங்குவா’ படத்துக்கு தடை கோரி வழக்கு
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’படத்துக்கு தடை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கான பாக்கித் தொகை நாளைக்குள் வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, ‘டெடி -2’, ‘எக்ஸ் மீட்ஸ் ஒய்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களுக்கான தயாரிப்பு பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.99.22 கோடியை கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரூ.45 கோடியை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா, எஞ்சிய ரூ.54 கோடியை திருப்பி செலுத்தாமல் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாகவும், எனவே இந்த...
ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ் தேதி – படக்குழு முடிவு
ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிரதர்’ படம் பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்தப் படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனிடையே, தனது அடுத்த பட வெளியீட்டுக்கு தயாராகிவிட்டார் ஜெயம் ரவி.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்....
தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணி 43-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன் ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்தரபிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அந்தமான் & நிக்கோபார் அணிகள் மோதின.
இதில் தமிழ்நாடு அணி 43-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்திக் 13 கோல்களை அடித்து மிரளச் செய்தார். அவருக்கு அடுத்தபடியாக சுந்தர பாண்டி,...














