Home 2024
Yearly Archives: 2024
லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காப்பீட்டு நிறுவன பெண் அதிகாரி உயிரிழப்பு: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி படுகாயம்
லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காப்பீட்டு நிறுவன பெண் அதிகாரி உயிரிழந்துள்ளார். பின்னால், அமர்ந்து பயணித்த அவரது தோழியான ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி காயமடைந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சொர்ண லட்சுமி (40). காப்பீடு நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருந்தார். அவரது சிறுவயது தோழி பிரபா (42). இவர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவியாவார். இந்நிலையில் மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சொர்ண லட்சுமி இருசக்கர...
வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்ட தேர்வு: மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 16 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 2024-25 கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாதோர் அனைவரையும் 100 சதவீதம் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை...
எம்பிபிஎஸ் மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 23-ம் தேதி வரை அவகாசம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசியமருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையத்தில் பதிவேற்ற கடந்த 8-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது,...
3.50 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: சென்னை குடிநீர் வாரியம் மும்முரம்
வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னைக் குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
சென்னையில் 1993-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மழைநீரை சேமிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசு கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள், தொழில்துறை கட்டிடங்கள் என அனைத்துக் கட்டிடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், எதிர்பார்த்த பலனில்லாததால், சென்னைப் பெருநகரப் பகுதி நிலத்தடி நீர் ஒழுங்குபடுத்தும்...
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி வந்ததாக குற்றம்சாட்டி, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, அந்த படகுகளில் இருந்த...
அதிமுக களஆய்வு குழுவுடன் பழனிசாமி இன்று ஆலோசனை
அதிமுக களஆய்வுக் குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.
கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை மாவட்ட வாரிய சென்று களஆய்வு செய்து,...
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பட்டாசு ஆலை ஆய்வுக்கு 9-ம் தேதி நான்...
டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நவ.15 வரை கனமழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம்...
கழிவு நீர் கலப்பதாக அவமதிப்பு வழக்கு தாக்கல்: தாமிரபரணி ஆற்றில் நீதிபதிகள் ஆய்வு
கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக நெல்லையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தாமிரபரணியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், நீதிமன்ற உத்தரவை மீறி, தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, நதியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்யப்போவதாக தெரிவித்தனர்.
இதன்படி, நெல்லைக்கு நேற்றுவந்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர்,...
‘அமானுஷ்யம் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர் இந்திரா சவுந்தரராஜன்’ – தலைவர்கள் புகழஞ்சலி
மதுரை / சென்னை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான இந்திரா சவுந்தரராஜன் (66) மதுரையில் நேற்று காலமானார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுரை டிவிஎஸ் நகரில் வசித்த இந்திரா சவுந்தரராஜன், சில காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று காலை குளியல் அறையில் வழுக்கி கீழேவிழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி ராதா, மகள்கள் ஐஸ்வர்யா, நிதி உள்ளனர்.
இந்திரா சவுந்தரராஜனின்...














