Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பாஜவின் கொள்கைகள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள். நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுபடுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பை காக்க காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய பிரதமர் மோடி உதவுகிறார். நாங்கள் மோடி அரசை தோற்கடித்து, நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

தவறான சமிக்ஞை அளித்ததால் இன்ஜின் இடையே சிக்கி ரயில்வே ஊழியர் பரிதாப பலி

பிஹார் மாநிலம் பரவுனி ஜங்ஷனை நவம்பர் 9-ம் தேதி காலை 8.10 மணிக்கு லக்னோ-பரவுனி ரயில் வந்தடைந்தது. அப்போது, பாயிண்ட்மேன் முகமது சுலைமான் மற்றும் அமர் குமார் ராவ் இன்ஜினை தனியாக பிரிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த பணியின்போது, ரயில் ஓட்டுநருக்கு தவறான சமிக்ஞை வழங்கப்பட்டதால் இன்ஜினுக்கும் பவர் காருக்கும் இடையில் நசுங்கி அமர் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே இன்ஜின் மற்றும் பவர் கார் தனியாக பிரிக்கப்பட்டு அமர்...

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதை பொருள் கடத்த முயற்சி: எல்லையில் 200 ட்ரோன்களை கைப்பற்றிய ராணுவம்

பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடப்பாண்டில் இதுவரை 200 ட்ரோன்கள் பிடிபட்டன என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை காவல் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், போதைபொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) சார்பில்பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து பிஎஸ்எப் வட்டாரங்கள் கூறியதாவது: முந்தைய காலத்தில் சுரங்கப் பாதை மற்றும்...

பால் தாக்கரேவை அவமதித்த காங்கிரஸுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி: மத்திய அமைச்சர் அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேர்தல் அறிக் கையை நேற்று வெளியிட்டு பேசியதாவது: பால் தாக்கரேவையும் வீர் சாவர்க்கரையும் அவமரியாதை செய்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு நான் சவால் விடுகிறேன். வீர் சாவர்க்கரைப் பற்றி ஒரு சில நல்ல வார்த்தைகளை ராகுல் காந்தி பேசுவாரா என்று உத்தவ் தாக்கரே கேட்டுப் பார்க்கட்டும். பால் தாக்கரேவைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் யாராவது நல்லவிதமாக பாராட்டி புகழ்ந்து பேசியிருக்கிறார்களா? இதுபோன்ற முரண்பாடுகளை வைத்துக் கொண்டு கூட்டணி...

குளிர்காலம் வருவதால் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வைகள்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இக்கோயிலில் ராமர் குழந்தை வடிவமாக (ராம் லல்லா) காட்சியளிக்கிறார். அவருக்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடைகளை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குளிர்காலத்தின் அகான் மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதம் முதல் குழந்தை ராமரை கதகதப்பாக வைக்கும் வகையில் க்வில்ட்ஸ், பஷ்மினா சால்வைகள் மற்றும்இதர டிசைனர் உடைகளைஉடுத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. மேலும் குழந்தை ராமருக்கு நைவேத்யமாக உலர் பழங்கள் படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜன.19 முதல் 28 வரை காசி தமிழ் சங்கமம்-3 : கும்பமேளா காணும் வகையில் தள்ளிவைப்பு

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம்-3, வரும் ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. பிரயாக்ராஜின் கும்பமேளாவை தமிழர்கள் காணும் வகையில் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது. உ.பி.யின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த ‘காசி தமிழ் சங்கமம் 2022 இல் துவக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமம் பிரதமர் நரேந்திர மோடியின் உருவாக்கமாக இருந்தது. இதனால், தனது மக்களவை தொகுதியில் நடைபெற்றதை பிரதமர் மோடியே துவக்கி வைத்திருந்தார். இரண்டாவது சங்கமமும் வாரணாசியில் நவம்பர்...

மணிப்பூரில் பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒரு உயிரிழப்பு

மணிப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் சைடோன் கிராமத்தில் உள்ள வயலில் சுமார் 20 பெண்கள் நேற்று முன்தினம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் சபம் சோபியா (27) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த கிராமத்தைச்...

நடிகை கஸ்தூரி திடீர் தலைமறைவு? – தேடும் பணியில் போலீஸார் தீவிரம்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம்போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு...

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: கச்சேரி சாலை அருகே எரிவாயு கசிவால் சுரங்கப்பாதை பணி தற்காலிகமாக நிறுத்தம்

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4 -வது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ சுரங்கப்பணி நடைபெற்றுவரும் நிலையில், கச்சேரி சாலை அருகே எரிவாயு கசிவு காரணமாக, சுரங்கப்பாதை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில்கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட...

ரயில்வேயின் யுடிஎஸ் செயலியில் கட்டணம் செலுத்தியும் டிக்கெட் வரவில்லை: அபராத தொகை செலுத்தும் பயணிகள்

யுடிஎஸ் செயலி மூலமாக டிக்கெட்பதிவு செய்வோரிடம் கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டாலும், மொபைல் செயலியில் டிக்கெட் எடுக்கவில்லை என காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பயணிகள் டிக்கெட் பரிசோதகர்களிடம் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுக்காக கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யுடிஎஸ்மொபைல் செயலி செயல்பாட்டில் உள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டை இந்த செயலி வாயிலாக எடுத்து, பயணிகள் எளிதாக பயணம் செய்து வருகின்றனர். இதற்காக, ஸ்மார்ட் போனில் இந்த செயலியை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...