Home 2024
Yearly Archives: 2024
களியக்காவிளை: மாற்றுத்திறனாளியை தாக்கியவர் மீது வழக்கு
களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சார்ந்தவர் சுகுமாரன்(42). இவர் மாற்றுத்திறனாளி ஆகும். ஆட்டோ ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது போதையில் வழி தெரியாமல் ஒரு வீட்டின் கதவினை தட்டியுள்ளார். இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்களின் அடி உதைபட்டு வழி தெரியாமல் மற்றொரு வீட்டின் கதவினை தட்டியுள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் சுரேஷ் (20) இவரை பலமாக தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். இதனை...
கிள்ளியூர்: தி மு க பூத் முகவர்கள் கூட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் லெவல் பாக முகவர்கள் கூட்டம் நேற்று பாலூர் கருங்கல் அலுவலகத்தில் வைத்து மாலை நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் பாலூர் தேவா தலைமையில், ஒன்றிய செயலாளர் பி கோபால் கலந்துகொண்டு ஒன்றிய கழகத்தின் பூத்து லெவல் முகவர்கள் செயல்பட வேண்டிய குறித்து ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறி னார்.
தொகுதி பொறுப்பாளர் திரு ஆவின் ஆறுமுகம் கலந்து கொண்டு பாக முகவர்கள் செயல்பட வேண்டிய கழகப் பணிகளை எடுத்துக்...
பளுகல்: எலக்ட்ரீசியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
பளுகல் அருகே ஈசவிளைகோணம் பகுதியை சேர்ந்தவர் - விஷ்ணு பிரசாத் (34). - எலக்ட்ரிஷியன். அவரது மனைவி மஞ்சு (30). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மஞ்சு ஒரு நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். தற்போது விஷ்ணு பிரசாத் மனைவி, குழந்தைகளுடன் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். விஷ்ணு பிரசாத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று மாலை வேலை முடிந்து விஷ்ணு...
‘டிராகன்’ படத்தில் இணைந்த 3 இயக்குநர்கள்
‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, அடுத்து இயக்கும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர்.
தற்போது இந்த திரைப்படத்தில் 3 இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ‘மயில்வாகனன்’ என்ற கேரக்டரில் மிஷ்கின், ‘வாலே குமார்’ என்ற கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன், ‘பரசுராம்’ என்ற கேரக்டரில் இயக்குநர்...
அரிய குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்… – தலைவர்கள், திரையுலகினர் புகழஞ்சலி
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மர்ம தேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, செல்லமே உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சில பிறமொழி நடிகர்களுக்குப் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த அவர், சனிக்கிழமை இரவு குடும்பத்தினரோடு...
தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஒடிசா அணி வெற்றி
தேசிய சீனியர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி வெற்றி கண்டது. 14-வது ஆடவருக்கான தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி 9-0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல் அணியை வீழ்த்தியது. ஒடிசா அணியின் சார்பில் அஜய் குமார் எக்கா (15, 50-வது நிமிடங்கள்), கெரோபின் லக் (47, 53-வது நிமிடங்கள்), அமன்தீப் லக் (5, 25-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2...
இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் நகரில் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி 2 குழுவாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி,...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 6-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி தோல்வி
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 6-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி அதிர்ச்சி தோல்வி கண்டார்.
இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற 6-வது சுற்று போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் ஈரானின் அமீன் தபதாபேயி, சகநாட்டைச் சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதினார். இந்த ஆட்டம் 36-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
2-வது போர்டில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அரவிந்த்சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி...
22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் தொடரில் ஆஸி.யை வீழ்த்தியது பாகிஸ்தான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில், பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில், தொடரை கைப்பற்றுவது யார் என்பதை முடிவு செய்யும் முக்கியமான 3-வது ஒருநாள் போட்டி பெர்த் நகரில்...
ஓபிசி மக்களை ஜேஎம்எம் – காங். கூட்டணி பிரிக்கிறது: ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
இதர பிற்படுத்தப்பட்ட மக்களை (ஓபிசி) ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பிரிக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த உள்ள 81 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாளும், 2-ம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இதற்கான பிரச்சாரத்தில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் தே.ஜ கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி...














