Home 2024
Yearly Archives: 2024
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்: தமிழக அரசு அறிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும்...
திருவொற்றியூர் தனியார் பள்ளி வாயுக்கசிவு விவகாரம்: மாணவர் மயக்கத்துக்கு முயல்களே காரணம்
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இயங்கும் விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வாயுக்கசிவு காரணமாக 39 மாணவிகள் மயங்கியதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. விடுப்பு முடிந்து தனியார் பள்ளி கடந்த நவ.4-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போதும் சில வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மீண்டும் வாயு நெடி உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 பேர் வரை மயங்கியதால் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 4...
சென்னை | காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகள்
காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகளால் அப்பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் மந்த்ரா.
திருநங்கையான இவர், சமூக ஊடகங்களில் திருநங்கை தலைவிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒரே நேரத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த வேப்பேரி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். மேலும், கூடுதல் போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர்....
நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்பு
பழ.நெடுமாறனின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
உலகத்தமிழ் பேரமைப்பின் நிறுவனரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேற்று முகாம் அலுவலகம் சென்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் வெளியில் வந்து பழ.நெடுமாறனை வரவேற்று, கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா டிச.29-ம் தேதி சென்னையில் நடைபெறுவதாகவும், அவ்விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்றும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்தார். அந்த...
ஒரத்தநாடு அருகே அரசு பள்ளியில் வகுப்பில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’: நடவடிக்கை கோரி பெற்றோர் மனு
ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பேசாமல் இருப்பதற்காக மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த அக்.21-ம் தேதி 4-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை...
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை: காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (செவ்வாய்க் கிழமை) காலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலையில் 4.4 செ.மீ, தரமணியில் 4.0 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி...
ஈத்தாமொழி: வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த புதூரை சேர்ந்தவர் குமார், கொத்தனார். இவருடைய மகள் வினிஷா (வயது 17). இவர் கோணத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி. காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய வினிஷாவை நேற்று காலையில் பார்த்த போது காணவில்லை. அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத் தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும்...
ஆசாரிபள்ளம், வடசேரி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
நாகர்கோவில் வடசேரி, ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரவிளை மின்வினியோக பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. எனவே, அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாகர் கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம். எஸ். ரோடு,
காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே. பி. ரோடு, பால் பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதை கிராமம், அப்டா மார்க்கெட், திரவியம் ஆஸ்பத்திரி, தம்மத்துகோணம், ஆனந்தநாடார்குடி, அருமநல்லூர், கடுக்கரை, தடிக்காரன்...
அருமனை: 2 பிள்ளைகளின் தாய் திடீர் மாயம்
அருமனை அருகே ஆறுகாணி, ஒருநூறாம் வயல் பகுதியை சேர்ந்தவர் அகில் (32). இவரது மனைவி ரம்யா (28). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ரம்யா கணவரை பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கேரள மாநிலம் வெள்ளரடையில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் நேற்று (நவம்பர் 9) வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க...
வெள்ளிச்சந்தை: நாய் குறுக்கே பாய்ந்து பூசாரி படுகாயம்
வெள்ளிச்சந்தை அருகே கல்படிப் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (70). கோயில்களில் பூஜை மற்றும் ஹோமங்களுக்கு செல்வது வழக்கம். இவர் பக்கத்து ஊரான மணவிளை தமிழ்செல்வன் என்பவரின் மகள் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக தமிழ்ச்செல்வன் சதாசிவத்தை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து இரண்டு பேரும் ஊருக்கு திரும்பினர். பைக்கை தமிழ் செல்வன் ஓட்டினார். அப்போது பைக்கின் குறுக்கு திடீரென நாய் பாய்ந்தது. இதில் தமிழ்ச்செல்வன்...














