Google search engine
Home 2024

Yearly Archives: 2024

காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை: உச்ச நீதிமன்றம் கருத்து

காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசு அபாய அளவை எட்டிஉள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு முன்பு நேற்று மீண்டும்...

ஜார்க்கண்ட் தேர்தலில் இண்டியா – என்டிஏ நேரடிப் போட்டி: 7 முன்னாள் முதல்வர்களுக்கு பெரும் சவால்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையில் இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்த 2 கூட்டணிகளிலும் போட்டியிடும் சில வேட்பாளர்களின் வெற்றியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்கள் 7 பேரின் கவுரவம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஜார்க்கண்டின் தற்போதைய முதல்வரும் ஜேஎம்எம் கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் போட்டியிடுகிறார். சில காலமே முதல்வராக இருந்த சம்பை...

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான இளைஞர்: ஷிவ குமார் கூலிப் படையாக மாறியது எப்படி?

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஷிவ குமார் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப கஷ்டத்துக்காக கூலிப்படை நபராகஅவர் மாறியது தெரியவந்து உள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில், முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த மாதம் 12-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஷிவ குமார் கவுதமை, போலீஸார் அண்மையில் கைது செய்தனர். போலீஸார் முதல்கட்டமாக கவுதமிடம் நடத்திய விசாரணயில், சில நாள்கள் மும்பையில் தங்கியிருந்து சித்திக்கின் நடமாட்டத்தை கவனித்து வந்ததாகவும், கடந்த அக்டோபர்...

இந்திய கடற்படையில் விரைவில் 2 போர் கப்பல்கள்

ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் போர்க்கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டில் போர்க்கப்பல்கள் இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக போர்க்கப்பல்களை தயாரிக்கும் பணியில் தாமதம்...

அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதிபட தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிடுகிறது. போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி மீது விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், தற்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. கடந்த ஜுன் 9-ம் தேதி சுமார் 16 லட்சம் பேர் எழுதிய ஒருங்கிணைந்த குருப்-4...

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடமாடும் சிறை சந்தை மூலம் கைதிகளின் தயாரிப்புகள் விற்பனை

சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதை காவல் துறையினர் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். சென்னை புழல், வேலூர், திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு சிறையிலேயே வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள், சிறையின் வெளியே, அலுவலகம் அமைத்து விற்பனை செய்யப்படுகின்றன. தமிழக சிறைத் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை எழும்பூரில் சிறைச்சந்தை விற்பனை மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை பெருக்கும் வகையில் வாகனம்...

சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையக புதிய தலைவர் பொறுப்பேற்பு

சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையகத்தின் புதிய தலைவராக மூத்த கடற்படை அதிகாரி கமாடோர் சுரேஷ் பொறுப்பேற்றுள்ளார். கமாடோர் சுரேஷ் கடற்படையில் பணிபுரிந்தபோது தளவாடங்களை கையாளுவது, படைகளை அனுப்புவது, செயல் திட்ட உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் போதிய அனுபவம் பெற்றவர். அத்துடன், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், தேசிய பாதுகாப்புக்கு தேவையான தளவாடங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலும் திறன் பெற்றவர். இவரது தலைமையின் கீழ், சென்னையில் உள்ள படைக்கல தலைமையகம், துருப்புகள் மற்றும் தளவாட இயக்கங்களை நிர்வகித்தல், சிவில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் தளவாட சேவைகளைப் பெறுவதை...

நூறு நாள் வேலை திட்டம்: கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்கள் – தமிழக அரசு பெருமிதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.40,968.68 கோடியில் 10,14,959 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்ய 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரின்டர்கள் மற்றும்தடையில்லா மின்சாரம் வழங்கும்சாதனம் (UPS) ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. சொத்துவரி, குடிநீர் கட்டணம்,...

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். 14, 15-ம் தேதிகளில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை தொடங்கவில்லை. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும்...

கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்ல தொடங்கின

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர் சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளிலிருந்து நேரடியாக பறக்கும் ரயில் மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை பெற முடியாமல் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...