Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஹரியானா, மணிப்பூர் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹரியானா 8-0 என்ற கோல் கணக்கில் மிசோரம் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் ரோஹித் 4 கோல்களையும் ரஜிந்தர் சிங், ஜோகிந்தர் சிங், பர்தீப் சிங், அமித் சாஹல் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். ஹரியானாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 9...

பாட்மிண்டனில் ரித்விக் சாம்பியன்

சென்னை: தெலங்கானா சர்வதேச சாலஞ்சர்ஸ் பாட்மிண்டன் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி, தெலங்கானாவைச் சேர்ந்த தருண் ரெட்டி கதத்தை எதிர்த்து விளையாடினார். இதில் ரித்விக் சஞ்சீவி 21-11, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இவர், ஹட்சன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

புதின் உடன் ட்ரம்ப் பேசினாரா? – ரஷ்ய அதிபர் மாளிகை திட்டவட்ட மறுப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தச் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என்று கண்டித்துள்ளது. அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 6-ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அவர் உலகத் தலைவர்கள் பலருடன் பேசி வருகிறார். இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர்...

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் 855% உயர்வு

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-ம் நிதியாண்டில் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் 2023-ம் நிதியாண்டில் இது 41,330 ஆக, அதாவது 855 சதவீதம் (எட்டைரை மடங்குக்கு மேல்) உயர்ந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எப்படியாவது அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற இந்தியர்களின் தீராத ஆவலை...

ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்கள்: விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிட்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்க தேர்தலில் ஆதரவாக பேச பிரபல டாக் ஷோ நடத்துநர் ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்களை அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ் செலவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்ப்...

பாலஸ்தீன மக்களை சித்ரவதை செய்த ஹமாஸ் தீவிரவாதிகள்: வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீன மக்களை ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது. இதில், இதுவரை...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் கடந்த 10-ம் தேதி ஓய்வு பெற்றார். முன்னதாக, அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற...

காவல் நிலையத்தை தாக்கியதால் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: மணிப்பூரில் 11 தீவிரவாதி சுட்டுக் கொலை

மணிப்பூரின் ஜிரிபாம் பகுதி காவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தமோதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம்ஆண்டு மே மாதம் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில்,...

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் பாஜக வெற்றி பெறும்: மேட்ரைஸ் நிறுவன கருத்து கணிப்பில் தகவல்

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதிகூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன. அதேபோன்று எதிர் தரப்பில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் களம் காண்கின்றன. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து மேட்ரைஸ் நிறுவனம் அக். 10 மற்றும் நவ. 9-க்கு இடையில்...

என்கவுன்ட்டரில் சிக்கிய 2 மலையேற்ற வீரர்கள் மீட்பு

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த வனப்பகுதிக்கு மலையேற்றம் சென்ற இருவர் என்கவுன்ட்டர் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். பாறைகளில் பதுங்கிக்கொண்ட இருவரும் 100-க்கு டயல் செய்துதங்கள் இருப்பிடம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தங்கள் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பிறகு மலையேற்ற...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...