Home 2024
Yearly Archives: 2024
கடையாலுமூடு: காட்டுப்பன்றிகள் தாக்கி தொழிலாளி படுகாயம்
கடையாலுமூடு அருகே போக்கின்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாங்காய் பறித்து விற்கும் தொழிலாளி. இன்று (11-ம் தேதி) காலை மூக்கறைக்கல் என்ற பகுதியில் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கூட்டமாக காட்டு பன்றிகள் வந்தன. அந்த பன்றிகள் ஜெயராஜை தாக்கியுள்ளன.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி ரப்பர் தொழிலாளர்கள் விரைந்து பன்றிகளை துரத்தினர். இதில் படுகாயமடைந்த ஜெயராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக கடையாலுமூடு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நித்திரவிளை: 75 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல்
நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று (நவ.,11) மாலை சதீஷ்குமார் பழக்கடையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 பாக்கெட் குட்கா புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கிள்ளியூர்: தி மு க பூத் முகவர்கள் கூட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் லெவல் பாக முகவர்கள் கூட்டம் நேற்று பாலூர் கருங்கல் அலுவலகத்தில் வைத்து மாலை நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் பாலூர் தேவா தலைமையில், ஒன்றிய செயலாளர் பி கோபால் கலந்துகொண்டு ஒன்றிய கழகத்தின் பூத்து லெவல் முகவர்கள் செயல்பட வேண்டிய குறித்து ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறி னார்.
தொகுதி பொறுப்பாளர் திரு ஆவின் ஆறுமுகம் கலந்து கொண்டு பாக முகவர்கள் செயல்பட வேண்டிய கழகப் பணிகளை எடுத்துக்...
கலிங்கராஜபுரம்: வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முஞ்சிறை வட்டார 24வது மாநாடு கலிங்கராஜபுரத்தில் நேற்று (11-ம் தேதி) மாலை நடைபெற்றது. வட்டார குழு உறுப்பினர் ஜெயா கொடி ஏற்றி வைத்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி மாவட்ட மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து வட்டார குழு தேர்வு செய்யப்பட்டது. வட்டார செயலாளராக அலக்ஸ், மற்றும் 20 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது....
நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம்
சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (80), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். அவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடந்தது. அவரது மகன் மகா மற்றும் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். டெல்லி கணேஷ், இந்திய விமானப் படையில் பணியாற்றியவர்...
த்ரில்லர் கதையை இயக்குகிறார் சீனு ராமசாமி
சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா உட்பட பலர் நடித்தப் படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. டி.அருளானந்து தயாரித்த இந்தப் படம், செப்.20-ம் தேதி வெளியானது. இதையடுத்து கிராமத்துப் பின்னணியில், த்ரில்லர் கதையை சீனு ராமசாமி இயக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்குச் சரியான காட்சிகளும் திரையரங்குகளும் கிடைக்காததால் பெரும்பான்மையான மக்களுக்குச் சென்று சேரவில்லை. படம் வெளியான நாளில் 8 படங்கள் வெளியானதால், பல மாவட்டங்களில் இந்தப் படம் வெளியாக வில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு,...
ரூ.250 கோடியை தாண்டும் அமரன்: டாப் ஹீரோ வரிசையில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்து அக்.31-ம் தேதி வெளியான படம், ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது.
இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் குவித்து வருகிறது. தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம் மற்றும் வெளிநாடுகளிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை...
ரிவைசிங் கமிட்டிக்கு சென்றது ‘அந்த நாள்’!
ஆர்யன் ஷாம், ஆதியா பிரசாத், இமான் அண்ணாச்சி, ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘அந்த நாள்’. விவி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரகுநந்தன் தயாரித்துள்ளார்.
படம் பற்றி ஹீரோ ஆர்யன் ஷாம் கூறும்போது, “இது பில்லி சூனியப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படம். டெக்னிக்கலாக சிறப்பாக வந்திருக்கிறது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பினோம். ஆறு விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. சென்சாருக்கு அனுப்பினோம். நரபலி விஷயம் இருப்பதால் பல...
ஜாஸ் பட்லர் அதிரடியில் 2-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜாஸ் பட்லரின் அதிரடி காரணமாக இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரிட்ஜ்டவுணில் நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவல் 43, ரோமரியோ ஷெப்பர்டு 22, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சகீப் மஹ்மூத், லியாம்...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி சரானா, இந்தியாவின் விதித்...














