குமரி மாவட்ட பொது விநியோகத்திற்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் அரிசி மற்றும் நெல் வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து 976 டன் நெல் நேற்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அங்கிருந்து லாரிகள் மூலம் நெல் தனியார் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரவை செய்யப்பட்டு அரிசியாக நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.