Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி: உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்

இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 3-வது நாளான நேற்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அமீன்தபதாபேயி 38-வது நகர்த்தலின்போது வெற்றியை வசப்படுத்தினார். 2-வது போர்டில் இந்தியாவின் விதித் குஜராத்தி சகநாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின்...

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை...

அரசியல் சாசன வெற்று நகலை விநியோகித்து அம்பேத்கரை அவமரியாதை செய்த காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பேரணியில் அரசியல் சாசன வெற்று நகலை விநியோகம் செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு கடுமையான அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெக்சாத் பூனாவாலா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மநிலம் நாக்பூர் நகரத்தில் ராகுல் காந்தி நடத்திய அரசியலமைப்பு சாசன மரியாதை மாநாட்டில் வெற்று நகல் புத்தகம் விநியோகிக்கப்பட்டது. இது, அக்கட்சியின் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் இந்த செயல் அம்பேத்கரை அவமதிப்பதாகும். இதன்மூலம், இட ஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு...

மாரடைப்பால் ஓட்டுநர் மயங்கியதால் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நடத்துநர்

பெங்களூருவில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்த விழுந்த நிலையில், நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி 50 பேரின் உயிரை காப்பாற்றினார். பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் ஜி 11 பேருந்து நேற்று யஷ்வந்த்பூரில் இருந்து நெலமங்களாவுக்கு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் கிரண் குமார் (32) அந்த பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு, தனது இருக்கையில் இருந்து சரிந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் சென்ற வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. இதை கவனித்த நடத்துநர் ஓபலேஷ்...

தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா பதவியேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பிஆர். நாயுடு தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. இதில் நேற்று முன் தினம் புதன் கிழமை அறங்காவலர் குழு தலைவராக பிஆர். நாயுடு உட்பட 15 பேர் திருமலையில் ஏழுமலையான் முன்பு பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று ஹைதராபாத் பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனரான சுசித்ரா எல்லா, ஆந்திர மாநில பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி மற்றும் முனி கோட்டேஸ்வர ராவ்...

ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது: மகாராஷ்டிர போலீஸிடம் ஒப்படைப்பு

இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் ரூ. 5 கோடி தராவிட்டால் அவரை சுட்டு கொன்றுவிடுவோம் என மிரட்டிய நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானின் மேலாளரை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது தன்னை பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், ரூ.5 கோடி தராவிட்டால் சல்மான் கானை, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை போல சுட்டுக்கொன்று விடுவேன் என கொலை...

2027-க்கு முந்தைய அரை இறுதிப் போட்டி போன்ற இடைத்தேர்தல்: பிரதமர் மோடி உட்பட 4 தலைவர்களை சந்தித்த ஆதித்யநாத்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக 9 தொகுதி இடைத்தேர்தல் கருதப்படுகிறது. இது தொடர்பாக, ஆர்எஸ்எஸ், பாஜக.வைச் சேர்ந்த 4 முக்கியத் தலைவர்களை சந்தித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 36 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், உ.பி.யில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் 2027-ல் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான...

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை: வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர் ஜி கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும், மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கக் கோரியும் பயிற்சி மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கறிஞர் ஒருவர் “அதிகாரமிக்கவர்கள்...

ஆப்கானிஸ்தானின் தலிபான் பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 1994-ம் ஆண்டு முல்லா உமர் மற்றும் அப்துல் கனி பராதர் இணைந்து தலிபான் இயக்கத்தைதொடங்கினர். தீவிரவாத செயலில் ஈடுபட்டு வந்த இந்த இயக்கம், 1996-ல் ஆட்சியை கைப்பற்றியது. 2001-ம் ஆண்டு அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டது. இதனால் தலிபான் ஆட்சி 2001-ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அமெரிக்க ஆதரவு...

விவசாய கழிவுகளை எரித்தால் அபராதம் ரூ.30,000 வரை உயர்வு

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, விவசாய கழிவுகளை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், விவசாய நிலங்களில் அறுவடைக்குப் பின்பு மிஞ்சும் கழிவுகளை எரிப்பதால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகரிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் காற்று மாசு மேலும் அதிகரித்தது. காற்றின் தர குறியீடு எண் 300-க்கும் மேல் அதிகரித்தது. இது மிக மோசமான நிலை. காற்றில் இருக்கும் 2.5 மைக்ரோமீட்டர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...