Home 2024
Yearly Archives: 2024
அற்புதமான மனிதர் நரேந்திர மோடியை ஒட்டுமொத்த உலகமும் விரும்புகிறது: ட்ரம்ப் புகழாரம்
‘‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. மொத்தம் உள்ள 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களில் 295 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று ட்ரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார்.
அவரை...
தோல்வி அடைந்தாலும் போராட்டம் ஓயாது: கமலா ஹாரிஸ் உறுதி
‘‘மக்கள்அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது’’ என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் முடிவு நாம் விரும்பியது அல்ல. நாம் போராடியது இதற்கு...
போக்குவரத்து வசதியற்ற மலைகிராம மக்களுக்கு மருத்துவ சேவை: 25 இருசக்கர ஆம்புலன்ஸ்களை ரூ.1.60 கோடியில் வாங்க தமிழக அரசு உத்தரவு
அணுக கடினமான, போக்குவரத்து வசதியற்ற மலைகிராமங்களில் வாழும் மக்களுக்காக, ரூ.1.60 கோடி மதிப்பில் 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்பட்டு, நோயாளிகளை...
சென்னை பல்கலை. முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இந்தாண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஆண்டுதோறும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதை வழங்கி சிறப்பிக்கிறார். இவ்விருதுடன், ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும்,...
கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிறக்கும் புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கும் கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்.
துணை முதல்வர் உதயநிதி: மறைந்த முன்னாள் முதல்வர்...
சென்னை, புறநகரில் விட்டு விட்டு மழை: மணலி புதுநகரில் 12 செ.மீ. பதிவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி மணலி புதுநகரில் 11 செ.மீ, மாதவரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே விட்டுவிட்டு மழை பெய்தது.
நேற்றும் அதிகாலை முதலே லேசானது முதல் மிதமான மழை...
அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,320 குறைந்தது; பவுன் ரூ.57,600-க்கு விற்பனை
அமெரிக்க தேர்தல் முடிவு எதி ரொலியாக நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்...
கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் நவம்பர் புரட்சி தினம்
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் நவம்பர் புரட்சி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நவம்பர் புரட்சி எனப்படும் ரஷ்யபுரட்சி தின விழா சென்னை தி.நகரில்உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:பாஜக அரசு கடைபிடிக்கும் பொருளாதார கொள்கை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தும் வகுப்புவாத கொள்கை, வாழ்க்கை தரத்தை பாதிக்கும் பொருளாதார கொள்கை...
பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றினால் கடும் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் பதிவாளர் எச்சரிக்கை
மருத்துவக் கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள், விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருத்துவக் கவுன்சில் பதிவாளர் டாக்டர் காமராஜ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மருத்துவ அலட்சியம், நெறியற்ற கட்டண விதிப்பு, தொழில்சார்ந்த தவறுகள், முறைகேடுகள் என பல்வேறு புகார்கள் டாக்டர் எஸ்.தினேஷ் (பதிவு எண் 61971) என்பவர் மீது முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் அந்த புகார்களில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டு டாக்டர் தினேஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை...
சுகாதார துறை குறித்து ‘அப்டேட்’ இல்லாமல் குற்றம்சாட்டும் காலாவதி அரசியல்வாதி சீமான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுகாதாரத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மருந்துகள் இருப்பு இல்லை என பழனிசாமி, சீமான் பொய் பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை ரூ.261.46 கோடி செலவில் 3 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் 3 லட்சமாவது பயனாளியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு...














