Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு

பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ‘ப்ளூ’ வைரஸ்களால் பரவும், இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு, நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் மாதம் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள்...

கனமழை எதிரொலி: திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூரில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இன்றும்...

மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: சார் பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு

திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் இடைத்தரகராக பணியாற்றி பொது மக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று மாலை மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு...

குழித்துறை: பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை

நித்திரவிளை அருகே ஆலங்கோடு, பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திர விக்னேஷ் (37) இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விஜயகுமாரி (54). இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்திர விக்னேஷ் விஜயகுமாரியின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு குழித்துறை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  நேற்று (6-ம் தேதி) வழக்கு விசாரணை நடந்து...

நாகர்கோவில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்ஐசி அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் நேற்று(நவம்பர் 6) ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், "எல்ஐசி பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்; உயர்த்தப்பட்ட எல்ஐசி பாலிசிக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும்; குறைந்த காப்பீடு தொகையை இரண்டு லட்சமாக உயர்த்தியதை குறைத்திட வேண்டும்; எல்ஐசி பாலிசி சேருவதற்கான வயதை 50 ஆக குறைத்ததை கூட்ட வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

குமரியில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வுக் கூட்டம்

குமரி மாவட்டத்திற்கு தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு அதன் தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ தலைமையில் நேற்று(நவம்பர் 6) வந்தது. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த குழு பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழுவினர் பயனாளிகளுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் மனுக்கள் கொடுத்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ. தலைமையில் அதிகாரிகளுடன் நேற்று (நவம்பர் 6) ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகள் அடங்கிய மனுக்களை சட்டமன்ற குழு தலைவர் காந்தி ராஜனிடம் கொடுத்தனர். அந்த மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.

இரணியல்: வீட்டில் நகை, குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டில் வைத்திருந்த பித்தளை குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கடந்த 18ஆம் தேதி திடீரென காணவில்லை. இதைக் குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நேற்று (நவம்பர் 6) இரணியல் போலீசார் மணக்கரை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர் மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜான் ரென்சோ பிரபு (34) என்பதும், ராமச்சந்திரன் வீட்டில் குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்களை...

பத்மநாபபுரம்: வரிப்பணம் சுருட்டல்.. பெண் காசாளர் பணியிடை நீக்கம்

பத்மநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் நகராட்சி மக்கள் பல்வேறு வகை கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கணினி மூலம் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக வசூல் ஆகும் தொகையை அலுவலகத்தில் செலுத்துவதில் குளறுபடி இருந்தது. நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வரி வசூல் மையத்தில் தொகை குறித்து தணிக்கை செய்ய உத்தரவிட்டார். இந்த தணிக்கையின்போது சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் நகராட்சி அலுவலகத்திற்கோ, வங்கிக்கோ செலுத்தாமல் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.  இதைத்...

இரணியல்: வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகை மாயம்

இரணியல் அருகே காற்றாடி மூடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (55). நாகர்கோவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குருந்தன்கோடு பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகள் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவதினம் சுந்தரலிங்கம் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 11 பவுன் தங்க நகைகள் திடீரென மாயமானது. இது குறித்து அவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் பக்கத்து வீட்டை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...