Google search engine
Home 2024

Yearly Archives: 2024

வள்ளவிளை: 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை அந்தோணியார் குருசடி பகுதியில் ஒரு சொகுசு வேனில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் உடன் நிற்பதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த இடத்திற்கு கொல்லங்கோடு எஸ்.ஐ வில்சன் தலைமையான போலீசார் நேற்று (நவம்பர் 6) மதியம் 12 மணியளவில் சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் கூடிய பொதுமக்கள் வேனை எடுத்துச் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர்,...

சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் விஜய் கனிஷ்கா

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்த ‘ஹிட் லிஸ்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், விஜய் கனிஷ்கா. இவர் இயக்குநர் விக்ரமனின் மகன். சரத்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட் என பலர் நடித்த இந்தப் படத்தை சூர்ய கதிர், கே.கார்த்திகேயன் இயக்கினர். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் விஜய் கனிஷ்காவின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து அவர் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தைத் தெலுங்கு இயக்குநர் ஹனுமான் இயக்குகிறார். பிரபல விநியோகஸ்தர் ஷோபா ராணி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான...

இது அந்த கால ‘மாப்பிள்ளை’!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத். அசோக் குமார் (1941), ராஜமுக்தி (1948), மாயா மச்சீந்திரா (1939) உட்பட பல படங்களை இயக்கிய ராஜா சந்திரசேகரின் தம்பி இவர். வேதவதி அல்லது சீதா ஜனனம் (1941), தமிழறியும் பெருமாள் (1942), மகா மாயா (1944), பிரபாவதி (1944) உட்பட பல படங்களை இயக்கியுள்ளார், டி.ஆர்.ரகுநாத். அவர் இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று, ‘மாப்பிள்ளை’. டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் பி.கே.சரஸ்வதி நாயகி. இவர், வேலைக்காரி, இன்பவல்லி, அந்தமான் கைதி...

மருதநாயகம், மர்மயோகி மற்றும் பல… கமல்ஹாசனின் நிகழாத அற்புதங்கள் | பிறந்தநாள் ஸ்பெஷல்

2023-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் ‘KH 233’ என தற்காலிக பெயரிடப்பட்ட புதிய படத்தின் அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அந்தப் படத்தை எச்.வினோத் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாகவும், அப்படத்துக்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்றதாகவும், வெளியான செய்திகள் கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவரது புருவங்களையும் உயர்த்திப் பார்க்க செய்திருந்தது. ஆனால், 2024-ம் ஆண்டு ஜனவரியில் இந்தப் படம்...

சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி: மகாராஷ்டிரா அணி கோல் மழை

சென்னை: ஆடவருக்கான 14-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா ஜம்மு&காஷ்மீர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணி தரப்பில் நிஷாந்த் (22-வது நிமிடம்), பிரேம்குமார் (24-வது நிமிடம்), தேஷ்வின் விஜு (33-வது நிமிடம்), மோஹித் குஷ்வாஹா (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 'இ' பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் ஒடிசா 11-0 என்ற...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரிஷப் பந்த்துக்கு 6-வது இடம்

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓர் இடம் பின்தங்கி 4-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ஷுப்மன் கில் 4 இடங்கள் முன்னேறி...

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் ஈரான் கிராண்ட் மாஸ்டரான அமீன் தபதாபேயி, செர்பிய கிராண்ட் மாஸ்டரான அலெக்ஸி சரானா மோதினார்கள். இதில் அமீன் தபதாபேயி 45-வது நகர்த்தலின் போது வெற்றி கண்டார். இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை...

கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் வணிக போக்குவரத்து வாகனம் இயக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இலகுரக மோட்டார் வாகனத்துக்கான (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஒருவர் 7,500 கிலோவுக்கு குறைவான எடையுள்ள வணிகப் போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஒருவர் போக்குவரத்து வாகனங்கள் ஓட்டுவதை 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த 2017-ல் சாத்தியமாக்கியது. இதற்கு எதிராக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மனுவில் "எல்எம்வி உரிமம் வைத்துள்ள ஒருவரை பேருந்து, லாரி அல்லது ரோடு ரோலர் ஓட்ட அனுமதிக்கும்...

ம.பி. பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 35% இடஒதுக்கீடு

போபால்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ம.பி.துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா நேற்று கூறியதாவது: மத்திய பிரதேச அரசு வேலைவாய்ப்பில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை 35 சதவீதமாக உயர்த்த அமைச்சரவைகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வுக்கு 40 வயதில் 50 வயதாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தவிர கூடுதலாக 245 உர விற்பனை மையங்கள் அமைப்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன....

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீநகர்: அரசியல்சாசனத்தில் 370 சட்டப்பிரி வின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதன் மூலம் காஷ்மீரில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி அந்த கட்சி கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க கோரும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...