Home 2024
Yearly Archives: 2024
குமரி: 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒழுகுனேசேரி ஆராட்டு துறையில் இருந்து ஊர்வலம்
சபரிமலை ஐயப்பன் கோயில் 41வது நாளான மண்டல பூஜை விழாவான இன்று (டிச. 26) நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதி அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா சுவாமிக்கு ஒழுகுனேசேரி ஆராட்டு துறையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பால், மஞ்சள் பொடி, களபம், நெய் போன்ற அபிஷேகப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன் கலந்து கொண்டனர்.
குளச்சல்: பைக் மீது வாகனம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு
குளச்சல் அருகே கடியப்பட்டணம் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் மரியா சிகாமணி மகன் ரோகின் எம் மரியா (36). இவருக்கு கார்மல் நிதிதா என்ற மனைவியும் 11 மாதங்களில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரோகின் எம் மரியா பஹ்ரைன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பைக்கில் அவர் மனைவியின் ஊரான குளச்சலுக்குச் சென்றார். ஆனால் பின்னர் அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை.
இதற்கு இடையே இன்று...
கருங்கல்: வேகத்தடையில் தடுமாறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
குளச்சல் அருகே கோடிமுனை பகுதி சைமன் காலனியைச் சேர்ந்தவர் விஷால் தாதேயுஸ் (26). இவர் கிறிஸ்துமஸ் குடில் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலையில் கருங்கல் பகுதிக்குச் சென்றார். தெருவுகடை பகுதியில் வைத்து சாலையில் இருந்த வேகக்கட்டுப்பாட்டில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை நண்பர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவட்டார்: பூசாரியை தாக்கி கோவில் சிலை சேதப்படுத்தியவர் கைது
திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியில் இசக்கி அம்மன், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (49) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவரான சஜின் (27) என்பவருக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தர் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, சஜின் அங்கு வந்து தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கோவில் உள்ள சாமி சிலைகளை சேதப்படுத்திவிட்டு...
வீயன்னூர்: ஊழியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு
திருவட்டாறை அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சிங் டேவிட் ராஜன் (55) இவர் நாகர்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு வீட்டில் வசித்து வருகிறார். வாரந்தோறும் பூவன்கோட்டில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஜெய்சிங் டேவிட் ராஜனுக்கும், அதே பகுதியை சேர்ந்த விமல் (55) என்பவருக்கும் மதில் சுவர் கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெய்சிங் டேவிட் ராஜன் வீட்டிலிருந்து வெளியே வந்த போது,...
கருங்கல்: பிடிபட்ட வணிக வளாகத்தில் திருடிய வாலிபர்
கருங்கல் அருகே முள்ளங்கினா விளை பகுதியில் எட்வின் ராஜ் என்பவரின் உறவினருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. வணிக வளாக உரிமையாளர் சென்னையில் வசித்து வருவதால், எட்வின் ராஜ் அந்த வளாகத்தை கவனித்து வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வணிக வளாக உரிமையாளர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அவர்கள் வந்த கார் டிரைவரை வணிக வளாக முதல் மாடியில் உள்ள ரூமில் தங்க வைத்திருந்தனர். டிரைவர் ரூமில் உறங்கிக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அவரது செல்போன் மற்றும் 3000 ரூபாய்...
கிள்ளியூர்: மன்மோகன் சிங் மரணம்; எம். எல். ஏ. இரங்கல்
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான தராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: - இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இழப்பு இந்திய நாட்டிற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. உலக தலைவர்கள் போற்றிய பொருளாதார மேதை. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தவர். ஊழல் அற்ற வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆட்சி நடத்தும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்தியவர்.
தொலைநோக்கு...
“நடிகர்கள்தான் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும்” – தெலங்கானா முதல்வர் ரேவந்த்
“ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரபலங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் - ஒழுங்கில் சமரசம் செய்யக்கூடாது” என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது சம்பந்தமான வழக்கில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளரும் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் உட்பட தெலுங்கு திரையுல முக்கிய பிரமுகர்கள், மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை...
5 நாட்களில் 50 கோடி வசூல் – ‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு!
‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. டிசம்பர் 20-ம் தேதி வெளியான மலையாள படம் ‘மார்கோ’. இப்படத்தின் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உலகளவில் 5 நாட்களில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஹனிஃப் அடினி (Haneef Adeni) இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இப்படத்தினை ஷெரீப் முகமது தயாரித்துள்ளார். முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’...














