Monthly Archives: May 2024
இதுவரை நடந்த 5 கட்ட தேர்தலில் பாஜக 310 இடங்களை தாண்டிவிட்டது: அமித் ஷா பெருமிதம்
உத்தர பிரதேசம் டுமரியாகன்ஜ் தொகுதியில் 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜகதாம்பிகா பால்-ஐ ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் நேற்று பிரச்சாரம் செய்தார். சித்தார்த்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
முதல் ஐந்து கட்ட தேர்தல்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது. அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது. ஆனால், பாஜக ஏற்கெனவே 310 என்ற இலக்கை தாண்டிவிட்டது.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி...
வாக்கு இயந்திரத்தை உடைத்த வேட்பாளரை பிடிக்க 8 தனிப்படைகள்: ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு இயந்திரத்தை உடைத்த ஜெகன் கட்சியை சேர்ந்த மாசர்லா சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆந்திரதலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாசர்லா சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 13-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர் ராமகிருஷ்ணா தனது ஆதரவாளர்களுடன் பாலய்யா கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சென்றார். "இந்த வாக்குச்சாவடியில் எனக்கு எதிராக வாக்குப்பதிவு நடைபெறுவதாக தகவல் வந்தது. என்னை தோற்கடிக்க போகிறீர்களா?” என...
நீதிபதிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டினர்: ஓய்வுபெறும் நாளில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா நெகிழ்ச்சி
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டியுள்ளனர் என ஓய்வுபெறும் நாளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபச்சார விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாழ்த்தி பேசும்போது, ‘‘பல ராஜ்ஜியங்களை வெற்றி கொண்ட ராஜராஜசோழன் போல தலைமை நீதிபதியாக பதவி வகித்த கங்காபுர்வாலா அனைவருடைய இதயங்களையும்...
எல்லா நிலையிலும் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்: அமெரிக்க தூதரக அதிகாரி சமந்தா ஜாக்சன் வலியுறுத்தல்
பாலின சமத்துவம் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் எல்லா நிலையிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க துணை தூதரக அதிகாரியும், செய்தி தொடர்பாளருமான சமந்தா ஜாக்சன் வலியுறுத்தினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், தென்னிந்திய எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்ஸ் அலும்னி அசோசியேஷன், சுரானா அண்ட் சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னீஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், ‘அனைவரையும் உள்ளடக்கிய பத்திரிகை பணி சூழலை உருவாக்குவதில் செய்தி ஆசிரியரின் பங்கு’ என்ற தலைப்பில், சென்னையில் நேற்று குழு விவாதம் நடைபெற்றது.
சுரானா நிறுவன தலைமை செயல் அதிகாரி வினோத் சுரானா...
நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: எம்டிஆர்எஃப் அறக்கட்டளை – எம்பெட்யூஆர் நிறுவனம் ஒப்பந்தம்
நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்.டி.ஆர்.எஃப் அறக்கட்டளை - எம்பெட்யூஆர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நீரிழிவு நோய் பாதிப்பால் உடலில் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கண்டறிய மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஆராய்ச்சியை சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்) முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் இந்தியாவில் அதிகரித்துவரும் நீரிழிவு நோயின் பரவலை தடுக்கும் விதமாக சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், எம்பெட்யூஆர் நிறுவனமும் இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நீரிழிவு நோய் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான...
வார இறுதி நாட்கள், முகூர்த்த தினத்தையொட்டி 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 25, 26 தேதிகள் வார இறுதி நாட்கள்(சனி, ஞாயிறு - முகூர்த்த தினம்) என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக்கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க...
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே வட்ட வடா என்ற இடத்தில்கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை துரித கதியில் நிறைவேற்றி வருகிறது.
முதல்கட்டமாக, ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம்,...
தரமற்ற நிலக்கரியால் தமிழக அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு: மீண்டும் பேசுபொருளான அதானி நிறுவனம்
தமிழக மின்துறைக்கு 2012-16 காலகட்டத்தில் அதானி நிறுவனம் தரமற்ற நிலக்கரியை விநியோகித்ததாகவும், இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்தி, மீண்டும் கிளம்பும் அதே புகார் காரணமாக பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிமுக ஆட்சியில் அதாவது 2012-16 காலகட்டத்தில், மின்வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு நந்துள்ளதாக சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. குறிப்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2014-ல் 15 லட்சம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரியை கொள்முதல் செய்தது.
இதில் தமிழகத்துக்காக, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி...
“மேனகாவை அவமதித்த காங்” – 1981 அமேதி சம்பவத்தை சுட்டிக்காட்டி ஸ்மிருதி விமர்சனம்
அமேதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி, அங்கு 1981-ல் நடைபெற்ற தேர்தல் வன்முறையை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது ராஜீவ் காந்திக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட மேனகா காந்தியை தாக்கியதுடன், அவரது உடைகளை கிழிக்கவும் காங்கிரஸார் முயற்சித்ததாகக் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் ஐந்தாம் கட்டமாக தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. தனது தீவிரத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே அவர் ஊடகங்களுக்கும் பேட்டிகளை அளித்து வருகிறார்.
அதன்படி, பேட்டி ஒன்றில் ஸ்மிருதி இரானி, அமேதியின்1981...
கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் @ டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரையும், ஆம் ஆத்மி கட்சியையும் சேர்த்துள்ளது.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு...














