இந்திய – வங்கதேச எல்லையில் ரூ.25 கோடி மதிப்பிலான 15.6 கிலோ தங்கம் பறிமுதல்

0
16

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்​டத்​தில் உள்ள பான்​பூர் எல்​லைப் பகு​தி​யில் தங்கம் கடத்​தப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. அந்த தகவலின் அடிப்​படை​யில், எல்​லைப் பாது​காப்​புப் படை​யின் 32-வது பட்​டா​லியன் வீரர்​கள் தீவிர ரோந்து, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

நீண்ட நேரக் கண்​காணிப்​புக்​குப் பிறகு, அந்​தப் பகு​தி​யில் சந்தேகத்​துக்கு இடமான வகை​யில் சுற்​றித் திரிந்த பெண் ஒரு​வரைப் பிடித்து எல்​லைப் பாது​காப்​புப் படை​யினர் சோதனை செய்​தனர். அப்​போது அவரிட​மிருந்து 15 கிலோ 607 கிராம் எடையுள்ள தங்​கக் கட்​டிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

பறி​முதல் செய்​யப்​பட்ட தங்​கத்​தின் சந்தை மதிப்பு ரூ.24 கோடியே 95 லட்​சத்து 56 ஆயிரம் ஆகும். எல்​லைப் பகு​தி​யில் அண்​மைக்​காலத்​தில் கைப்​பற்​றப்​பட்ட மிகப்​பெரிய தங்​கக் கடத்​தல் சம்பவங்​களில் ஒன்​றாக இது பார்க்​கப்​படு​கிறது.

இந்​தத் தங்​கம் எல்​லைப் பகு​திக்கு எப்​படிக் கொண்டு வரப்​பட்​டது, இதை யாருக்கு விநி​யோகம் செய்​யத் திட்​ட​மிட்​டிருந்​தனர். இதன் பின்​னணி​யில் உள்ள சர்​வ​தேசக் கடத்​தல் கும்​பல் யார் என்​பது குறித்து பிடிபட்ட பெண்​ணிடம் பிஎஸ்​எப் அதி​காரி​கள் விசாரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here