தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர் வருகைக்கு எதிர்ப்பு: பெங்களூரு தேசிய சட்டப் பல்கலை. 34-வது பட்டமளிப்பு விழா ரத்து

0
19

வரும் செப்​டம்​பர் 12-ம் தேதி 34-வது பட்டமளிப்பு விழா நடை​பெறும் என பெங்களூரு தேசிய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறி​வித்​திருந்​தது.

இவ்​விழாவுக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் இந்​திய பார் கவுன்​சில் தலை​வர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோரை அழைக்க முடிவு செய்​யப்​பட்​டிருந்​தது. பல்கலைக்கழகத்​தின் இந்த முடிவுக்கு மாணவர்​கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்​து, தவிர்க்க முடி​யாத சூழ்​நிலை காரண​மாக பட்டமளிப்பு விழா ரத்து செய்​யப்​படு​வ​தாக பல்​கலைக்​கழக நிர்வாகம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது. பல முயற்சிகளை மேற்​கொண்ட போதி​லும் திட்​ட​மிட்​டபடி விழாவை நடத்த முடிய​வில்லை என பல்​கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

முன்​ன​தாக, ஹைத​ரா​பாத் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தில் தலைமை நீதிபதி பங்​கேற்​ப​தற்கு மாணவர்​கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்​திரமடைந்த இந்​திய பார் கவுன்​சில், 2026-ம் ஆண்டில் சட்​டப் படிப்பை முடிக்​கும் பட்​ட​தா​ரி​களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்​சில்​களுக்கு உத்​தர​விட்​டது. ஆனால், பின்​னர் அந்த உத்தரவை பார் கவுன்​சில் திரும்​பப் பெற்​றுக்​கொண்​டது. அத்துடன், பார் கவுன்​சில் தலை​வ​ரான மனன் குமார் மிஸ்ரா மாணவர்​களிடம் மன்னிப்பு கேட்​டார்.

விழா ரத்​தா​னாலும், பட்​டம் பெறும் மாணவர்​களுக்கு இது எந்த வகை​யிலும் இடையூறாக அமை​யாது என பல்​கலைக்​கழகம் உறுதி​யளித்​துள்​ளது. நிர்​வாகக் குழுக்​களின் தேவை​யான ஒப்புதலுக்கு உட்​பட்​டு, பட்​டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி விழா இல்​லாமலேயே பட்​டங்​கள் வழங்கப்​படும் என்று பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது. மாணவர்​கள் தங்​களின் சான்​றிதழ்​களைக் கூரியர் மூல​மாகவோ அல்​லது பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேரில் வந்தோ பெற்​றுக் கொள்​ளலாம்​ என்​றும்​ அறி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here