குளச்சலில் கோயில் நிகழ்ச்சிக்குச் சென்ற 14 வயது சிறுமி மாயம்

0
44
குளச்சலில் கோயில் நிகழ்ச்சிக்குச் சென்ற 14 வயது சிறுமி மாயம் – போலீசார் தேடுதல்
குளச்சலில் கோயில் நிகழ்ச்சிக்குச் சென்ற 8ஆம் வகுப்பு மாணவி வீடு திரும்பாததால் போலீசார் தேடி வருகின்றனர்.

குளச்சலில் கோயிலுக்கு சென்ற சிறுமி மாயம்

குளச்சலில் கோயிலுக்கு சென்ற சிறுமி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலம் உதயமார்த்தாண்டம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். கடந்த சில நாட்களாக இவர் குளச்சல் அரசு விருந்தினர் மாளிகை சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது 14 வயது மகள் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி குளச்சலில் ஒரு கோயிலில் நடந்த நிகழ்ச்சியை பார்த்து வர சிறுமி சென்றுள்ளார்.

இரவு கோயில் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் சிறுமி பெற்றோர் தங்கியிருக்கும் இடத்திற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் பதற்றமடைந்தனர். அவர்கள் சிறுமி சென்ற கோயிலில் பகுதி முழுவதும் தேடினர். ஆனால் அங்கு சிறுமியை காணவில்லை.

பின்னர் அவர்கள் வள்ளியூர், கோவில்பட்டியில் உள்ள உறவினர்கள் வீடுகளில் சென்று விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சரவணன் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here