குளச்சல் அருகே வேகமாகத் திரும்பிய ஐஸ் லாரி கவிழ்ந்து விபத்து: 3 பெண்கள் உட்பட 4 பேர் காயம்!

0
10
வாணியக்குடி வியாபகப்பர் சந்திப்பில் ஐஸ் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 3 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
வாணியக்குடி வியாபகப்பர் சந்திப்பில் கவிழ்ந்த ஐஸ் லாரி.

வாணியக்குடி வியாபகப்பர் சந்திப்பில்

வேகமாகத் திரும்பிய ஐஸ் லாரி கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் காயம்!

குளச்சல் அருகே வாணியக்குடி வியாபகப்பர் சந்திப்பில் வேகமாகத் திரும்பிய ஐஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேற்று மாலை அருகில் செயல்படும் ஐஸ் கம்பெனியிலிருந்து ஒரு கூண்டு லாரி ஐஸ் லோடு ஏற்றிக் கொண்டு குளச்சலுக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றது.

வாணியக்குடி வியாபகப்பர் சந்திப்பில் செல்லும்போது லாரி வேகமாக திரும்பியதால் ஐஸ் நிரப்பப்பட்ட கூண்டு தனியாக பிரிந்து சந்திப்பில் உள்ள தையல் கடையின் காம்பவுண்டு சுவர் மீது விழுந்ததில் கடையின் கண்ணாடி சேதமடைந்ததுடன், அங்கிருந்த 3 பெண்கள் காயமடைந்தனர் மேலும் லாரி ஓட்டுநரும் காயமடைந்தார். அனைவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றனர் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here