சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கிய வட மாநிலத் தொழிலாளி கைது

0
22
குலசேகரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளி கைது
குலசேகரத்தில் ரகளையில் ஈடுபட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் வடமாநிலத் தொழிலாளி கைது.

குலசேகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக வட மாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராம் பா்வேஷ் புகியா. இவா் மணியன்குழி பகுதியில் உள்ள தனியாா் ரப்பா் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு மதுப் பழக்கம் உள்ளதாம்.

இவா் குலசேகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றுகொண்டு, அவ்வழியாகச் சென்ற வாகனங்களை மறித்தும், அப்பகுதியில் நின்ற இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளாா். அப்பகுதியினா் அவரைப் பிடிக்க முயன்றபோது அவா்களைத் தாக்கியுள்ளாா்.

தகவலறிந்த குலசேகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெஸ்டின்ராஜ் அங்கு சென்று அவரைப் பிடிக்க முயன்றபோது, அவரையும் தாக்கியுள்ளாா். அக்கம்பக்கத்தினருடன் இணைந்து போலீஸாா் அவரைப் பிடித்து, குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்தும் தப்பியோடியுள்ளாா்.

இந்நிலையில், குலசேகரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவசங்கா் திங்கள்கிழமை அவா் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தாா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here