ம.பி.யில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

0
28

மத்​திய பிரதேசத்​தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரி​தாபமாக உயி​ரிழந்​தனர். மேலும் பலர் கவலைக்​கிட​மான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

மத்​திய பிரதேசத்​தின் சாகர் மாவட்​டம், பராஜ் கிராமத்தை சேர்ந்த ஆண்​கள் பலர் நேற்று முன்​தினம் இரவு அங்கு விற்கப்பட்ட கள்​ளச்​சா​ர​யத்தை வாங்கி குடித்​துள்​ளனர். இதையடுத்​து, அவர்​களுக்கு குமட்​டல், வாந்தி போன்ற உடல் உபாதை ஏற்​பட்​டுள்​ளது. அவர்​களை குடும்​பத்​தினர் உடனடி​யாக பண்டா சிவில் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். இதே​போல அரு​கில் உள்ள 2 கிராமங்​களில் இருந்​தும் இதே பிரச்சினையுடன் பலர் அந்த மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்ந்​தனர்.

பின்​னர் அவர்​கள் அனை​வரும் மேல் சிகிச்​சைக்​காக புந்​தேல்​கண்ட் மருத்​து​வக் கல்​லூரிக்​கும், சாகரில் உள்ள மாவட்ட மருத்துவ​மனைக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டனர். அங்கு அவர்களுக்கு மருத்​து​வர்​கள் தீவிர சிகிச்சை அளித்​த​போ​தி​லும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். மேலும் பலர் கவலைக்கிட​மான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதனால் உயி​ரிழப்பு மேலும் அதி​கரிக்க வாய்ப்புள்​ளது.

இதுகுறித்து சாகர் மருத்​து​வ​மனை​யின் தலைமை சுகா​தார அதிகாரி டாக்​டர் தேவேஷ் பதேரியா கூறும்​போது, ‘‘கள்​ளச் சாராயம் குடித்​தவர்​களில் 12 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்​களுக்கு மருத்​து​வர்​கள் மற்​றும் செவிலியர்​கள் அடங்​கிய குழுக்​களை அனுப்பி உள்​ளோம்.

உடல்​நலம் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் கடந்த 24 முதல் 48 மணி நேரத்​தில் எந்த வகை​யான மது​பானத்தை அருந்தி இருந்​தா​லும், மருத்துவரிடம் பரிசோ​தித்​துக் கொள்​ளு​மாறு கேட்டுக்கொள்ளப்பட்​டுள்​ளனர்” என்​றார்.

இந்​தச் சம்​பவம் குறித்து நீதித்​துறை விசா​ரணைக்கு உத்தரவிடப்பட்​டுள்​ள​தாக மாநில முதல்​வர் மோகன் யாதவ் தெரிவித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறும்​போது, “கள்​ளச் சாராய விவ​காரத்​தில் உடனடி​யாகச் செயல்​பட​வும், மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​க​வும், முழு​மை​யான வி​சா​ரணை நடத்​த​வும் அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். இது​போன்ற சம்பவங்​களை எங்​கள் அரசு ஒரு​போதும்​ பொறுத்​துக்​கொள்​ளாது” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here