சிக்கிமில் மீத்தேன் வாயு கசிவால் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

0
17

சிக்கிம் மாநிலம் சாமர்​டங் பகு​தி​யில் ‘டீஸ்டா ஸ்டேஜ் VI’ நீர்​மின் திட்​டப் பணி​களுக்​காக படேல் இன்​ஜினியரிங் நிறுவனம் சுரங்கப்பாதை அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வருகிறது. நேற்று முன்​தினம் பிற்​பகல் 3:09 மணி​யள​வில், வழக்கம் போல் சுரங்​கப்​பாதையைத் தோண்​டும் பணி​கள் நடைபெற்​றுக் கொண்டிருந்​தன.

அப்​போது பாறை​களுக்​குள் அடைபட்​டிருந்த மீத்​தேன் வாயு பலத்த சத்​தத்​துடன் வெடித்​துச் சிதறிய​தால், உள்ளே இருந்த தொழிலா​ளர்​கள் வெளி​யேற முடி​யாமல் சிக்கிக் கொண்​டனர். இந்த எதிர்​பா​ராத விபத்​தில் இது​வரை 10 தொழிலா​ளர்களின் உடல்​கள் மீட்கப்​பட்​டுள்​ளன.

16 பேர் பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் 18-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் சுரங்​கத்​திற்​குள் சிக்​கி​யிருக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது. அவர்​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

இந்​தச் சுரங்​கப்​பாதை​யில் மீத்​தேன் வாயு கசிவு ஏற்​படு​வது இது முதல் முறையல்ல. சுமார் 4 மாதங்​களுக்கு முன்​பும் இதே​போன்று சிறிய அளவில் மீத்​தேன் வாயு கசிவு ஏற்​பட்​டது. அதில் சில தொழிலா​ளர்​களின் கைகளில் தீக்​கா​யங்​கள் ஏற்​பட்​டன. இருப்பினும், அப்​போது தொழிலா​ளர்​கள் யாரும் உள்ளே சிக்காததால் பெரும் அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here