சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டனில் சாட்விக் – ஷிராக் ஜோடி சாம்பியன்

0
13

சிங்​கப்​பூர் ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

சிங்​கப்​பூரில் நடை​பெற்ற இந்​தத் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 3-வது இடத்​தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் பஜார் அல்​பி​யான், முகமது சோஹிபுல் ஃபிக்ரி ஜோடியை எதிர்த்து விளை​யாடியது.

ஒரு மணி நேரம் 13 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த தொடரில் சாட்விக்​-ஷி​ராக் ஜோடி 18-21, 21-17, 21-16 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது. சாட்விக்​-ஷி​ராக் ஜோடி 2 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் சர்​வ​தேச அரங்​கில் பட்​டம் வென்​றுள்​ளது. கடைசி​யாக இந்த ஜோடி கடந்த 2024-ம்

ஆண்டு தாய்​லாந்து ஓபனில் பட்​டம் வென்​றிருந்​தது. இதன் பின்னர் 4 தொடர்​களில் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறிய போதும் இந்த ஜோடி​யால் பட்​டம் வெல்ல முடி​யாமல் போனது. மேலும் சிங்கப்​பூர் ஓபனில் பட்​டம் வென்ற முதல் இந்​திய ஜோடி என்ற பெரு​மை​யை​யும் சாட்விக்​-ஷி​ராக் ஜோடி பெற்​றது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here