கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜை விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சி
நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.”,