பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விசிக தலைவர்திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
திண்டிவனம் தாலுகா அவ்வையார்குப்பம் ஊராட்சித் தலைவர் மகாலட்சுமி, கடந்த 20-ம் தேதி மாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட நாளில்இருந்து அலுவலகத்தில் இருக்கையில் அமரவிடாமல் சிலர் தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.மன உளைச்சல்: இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி விசிகதலைவர் திருமாவளவன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:திண்டிவனம் அருகே அவ்வையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமியை, அவருக்கான இருக்கையில் அமரவிடாமல் அவரை அவமதித்தும், இழிவாகப் பேசியும் அவருக்கு மன உளைச்சல் கொடுப்பதாகக் கூறி சாதியவாதக் கும்பலின் மீது நட வடிக்கை கோரியுள்ளார்.இதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புஅவர் அறப்போராட்டம் நடத்திஇருக்கிறார். அவருக்கு எதிராகஇழைக்கப்பட்டுள்ள சாதிய வன்கொடுமைக்குக் காரணமானவர் கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அத்துடன், ஊராட்சி மன்றத் தலைவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன், அவருக்கான இருக்கையில் அமர்ந்து கடமையாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.